உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 11, 2010

விருத்தாசலம் பெண்கள் பள்ளியில் கூடுதல் வசூல்: தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தால் பரபரப்பு

விருத்தாசலம் : 

                       விருத்தாசலம் அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விருத்தாசலம் காந்திநகர் பகுதியில் உள்ளது அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி. இப்பள்ளியில் சேர்க்கை விண்ணப்பத் திற்கு ரூபாய் 35, டி.சி., பெற ரூபாய் 300, சேர்க்கைக்கு ரூபாய் 120, புத்தக கமிஷன் ரூபாய் 10ம் வசூலிப்பதாக கூறி இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் பள்ளியின் முன் பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதை அடையாளம் தெரியாத சிலர் கிழித்து விட்டனர். இதையறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் அசோகன், வட்ட குழு உறுப்பினர் சிவஞானம், வட்ட செயலாளர் கந்தசாமி, வீராசாமி, சக்திமணிகண்டன் உள்ளிட்டோர் நேற்று மதியம் பெண்கள் பள்ளிக்கு சென்றனர். அங்கிருந்த தலைமை ஆசிரியர் சித்தார்த்தனிடம் எதற்காக இவ்வாறு கட்டணம் வசூலிக்கிறீர்கள் என தாங்கள் அடித்த போஸ்டரை காட்டி கேட்டனர். அதை படித்து பார்த்த தலைமை ஆசிரியர் சித்தார்த்தன் இதுபோல் இங்கு யாரும் வசூலிப்பதில்லை என கூறினார். அதற்கு அசோகன் தங்களிடம் ஆதாரம் இருப்பதாக கூறி வாக்குவாதம் செய்தார். அப்படி வசூலித் திருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior