உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 12, 2010

முன்னாள் எம்.எல்.ஏ., உறவினர் வீடு தாக்கு: 12 பேர் கைது

 கடலூர் : 

               முன்னாள் எம்.எல்.ஏ., உறவினர் வீடு மற்றும் காரை தாக்கி சேதப்படுத்திய வழக்கில் 12 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் செல்லங்குப்பம் மின்வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் வேலாயுதபாண்டியன். தேங்காய் மண்டி உரிமையாளரான இவர் கடந்த 6ம் தேதி கடலூர் முதுநகரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்., சென்டரில் பணம் எடுத்தபோது, செல்லங்குப்பம் காலனியைச் சேர்ந்த சேதுராமன், சுமன், ராஜா உள்ளிட்டோர் பணம் கேட்டு தகராறு செய்தனர்.

                    இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் இரவு வேலாயுத பாண்டியன் வீட்டையும், அங்கு நின்றிருந்த "இநோவா' காரை அடித்து நொறுக்கியது. இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் மதியம் சுமன் உட்பட 12 பேரை நேற்று முன்தினம் இரவு கைது செய்து தலைமறைவாக உள்ள சேதுராமன், ராஜாவை தேடிவருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தில் தொடர்பில்லாதவர்களை கைது செய்திருப்பதாகவும், அவர்களை விடுவிக்க கோரி செல்லங்குப்பம் காலனி மக்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர். தகவலின் பேரில் டி.எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Read more »

குள்ளஞ்சாவடியில் நகைக்கடை உள்ளிட்டமூன்று கடைகளில் ரூ.3.5 லட்சம் திருட்டு

குறிஞ்சிப்பாடி :

                    குள்ளஞ்சாவடியில் நகைக்கடை உட்பட 3 கடைகளின் பூட்டை உடைத்து 3.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணம் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குள்ளஞ்சாவடி அடுத்த தோப்புக்கொல்லையைச் சேர்ந்தவர் பிரகாஷ் (30). இவர் குள்ளஞ்சாவடி கடை வீதியில் நகை கடை வைத்துள்ளார். நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கடைக்கு வந்த போது பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே சென்று பார்த்தபோது 25 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி மற்றும் 25 ஆயிரம் ரூபாய் திருடு போயிருப்பது தெரியவந்தது. அதே பகுதியில் உள்ள சிவக்குமார் ஜெனரல் ஸ்டோர் என்ற கடையின் பூட்டை உடைத்து 20 ஆயிரம் ரூபாயும், அதன் அருகே இருந்த பாலாஜி மருந்து கடையில் 1,500 ரூபாயும் திருடு போயுள்ளது.

                     மூன்று கடைகளிலும் திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 3.5 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.தகவலறிந்த நெய்வேலி டி.எஸ்.பி., மணி, குள்ளஞ்சாவடி இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Read more »

சிதம்பரம் அருகே கோஷ்டி மோதல்: ஐந்து பேர் கைது

கிள்ளை : 

                 கந்தமங்கலத்தில் நடந்த கோஷ்டி மோதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். சிதம்பரம் அடுத்த கந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் செல்வம் (36). இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஜெயவேல் (30). இருவருக்கும் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் செல்வம், தான் கட்டிய புதிய வீட்டிற்கு கிரக பிரவேசம் நடத்துவது தொடர்பாக உறவினர்களுடன் ஆலோசித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே சென்ற ஜெயவேல், தன்னைப்பார்த்து ஏளனம் செய்வதாக கூறி தட்டிக் கேட்டார். இதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டு இரு கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர். இதில் செல்வம், சுந்தரராஜ், சுந்தரமூர்த்தி, தீபா, சுகந்தி, ரவிச்சந்திரன், கனகசபை ஆகியோர் காயமடைந்தனர். இது குறித்து இரு தரப்பினரும் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் கிள்ளை போலீசார் 14 பேர் மீது வழக்குப் பதிந்து ரவி, ரமேஷ், ஜெயவேல் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 7 பேரை தேடிவருகின்றனர்.


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior