உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 02, 2010

சிதம்பரம் அடுத்த தில்லைவிடங்கில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்

கிள்ளை: 

                  சிதம்பரம் அடுத்த தில்லைவிடங்கில் சுனாமியால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது.லுத்ரன் வேர்ல்டு சர்வீஸ் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த முகாமிற்கு திட்ட அலுவலர் பாபு தலைமை தாங்கினார். கிராம தன்னார்வலர் மதிக்குமார் வரவேற்றார். பகுதி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஷீலா, ரஜ்ஜித்கீதா முன்னிலை வகித்தனர். முகாமில் பங்கேற்ற இளைஞர்களுக்கு முன்னெச்சரிக்கை, முதலுதவி, தேடுதல் மற்றும் மீட்பு பணிகள், சுகாதாரம் குறித்து திருமுருகன், சிவசுப்ரமணியன் உள்ளிட்ட குழுவினர் பயிற்சி அளித்தனர்.  முகாம் ஏற்பாடுகளை களப்பணியாளர்கள் மகாலட்சுமி, தெய்வநாயகி செய்திருந்தனர்.

Read more »

பழுதடைந்த சாலைகளை சீரமைக்கா விடில் பொது நல வழக்கு

விருத்தாசலம்: 

              பழுதடைந்த சாலைகளை சீரமைக்காவிட்டால் நெடுஞ்சாலை துறை மீது பொதுநல வழக்கு தொடரப்படும் என விருத்தாசலம் நுகர்வோர் உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வி விழிப்புணர்வு மையம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து விருத்தாசலம் நுகர்வோர் உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வி விழிப்புணர்வு மைய தலைவர் செந்தமிழ்ச் செல்வன் உதவி கோட்ட பொறியாளருக்கு அனுப்பியுள்ள கடிதம்:

                 விருத்தாசலத்தில் பஸ் நிலையம், ஜங்ஷன் ரோடு, பாலக்கரை, உழவர்சந்தை ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்து விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதே நிலையில் கடந்த நான்கு மாதங்களாக சாலைகள் இருந்தும் நெடுஞ்சாலைத் துறை அலட்சியமாக உள்ளது.தென்கோட்டைவீதி, ஜங்ஷன்ரோடு உள்ளிட்ட இடங்களில் சாலை விரிவாக்கப்பணி முழுமையாக நடைபெறாமல் அரைகுறையாக உள்ளது. எனவே உடனடியாக பழுதடைந்த சாலைகளை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நெடுஞ்சாலைத் துறை முன் கண்டன ஆர்பாட்டமும், பொதுமக்கள் நலன் கருதி நெடுஞ்சாலை துறை மீது பொது நல வழக்கும் தொடரப்படும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

சிதம்பரம் அருகே ராகவேந்திரா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் திடீர் மறியல்

கிள்ளை: 

               சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டதால்  கிள்ளை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை அறியவில் கல்லூரியில் 800 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பல்வேறு துறைகளில் இளங்கலை பட்ட வகுப்பு படித்து வருகின்றனர்.  நேற்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள், கால தாமதமாக கல்லூரிக்கு வந்தால்  அபராதம்,  தாமதமாக செலுத்தும் கல்வி கட்டணத்திற்கு  அபராதம், திடீரென கல்லூரி நேரத்தை மாற்றுவது  உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி  வகுப்புகளை புறக்கணித்து காலை 9.50 மணிக்கு கல்லூரி வளாகத்தை முற்றுகையிட்டனர்.

               பின்னர்  மற்ற மாணவர்கள் கல்லூரிக்கு  அதிகளவில் வரத்துவங்கியதும் காலை 11.10 மணிக்கு சிதம்பரம் கிள்ளை சாலையில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பகுதியினர் கிள்ளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் ஒரு போலீசார் கூட சம்ப இடத்திற்கு வரவில்லை. நேரம் நெருங்க நெருங்க மாணவர்களின் அராஜகம் அதிகரித்தது. பின்னர் அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் 11.45 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத்தொடர்ந்து சாலை மறியல் விலக்கி கொள்ளப்பட்டது.இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior