கிள்ளை:
சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டதால் கிள்ளை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை அறியவில் கல்லூரியில் 800 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பல்வேறு துறைகளில் இளங்கலை பட்ட வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள், கால தாமதமாக கல்லூரிக்கு வந்தால் அபராதம், தாமதமாக செலுத்தும் கல்வி கட்டணத்திற்கு அபராதம், திடீரென கல்லூரி நேரத்தை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து காலை 9.50 மணிக்கு கல்லூரி வளாகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் மற்ற மாணவர்கள் கல்லூரிக்கு அதிகளவில் வரத்துவங்கியதும் காலை 11.10 மணிக்கு சிதம்பரம் கிள்ளை சாலையில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பகுதியினர் கிள்ளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் ஒரு போலீசார் கூட சம்ப இடத்திற்கு வரவில்லை. நேரம் நெருங்க நெருங்க மாணவர்களின் அராஜகம் அதிகரித்தது. பின்னர் அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் 11.45 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத்தொடர்ந்து சாலை மறியல் விலக்கி கொள்ளப்பட்டது.இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக