உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 16, 2010

பண்ருட்டியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

பண்ருட்டி,: 

              பண்ருட்டி பகுதியில் உள்ள பள்ளி வாகனங்கள் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டது.

               பள்ளி வாகனங்கள் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க ஐகோர்ட் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலரால் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. பண்ருட்டியில் கெடிலம் ஆற்றங்கரை அடுத்துள்ள சந்தைதோப்பில் ஆய்வு நடந்தது. இதில் 25 பள்ளிகளைச் சேர்ந்த 38 பஸ்,வேன் வாகனங்களை தாசில்தார் பன்னீர்செல்வம், போக்குவரத்து ஆய்வாளர்கள் கோகுலகிருஷ்ணன், செல்வம், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

                ஆய்விற்கு பின் நடந்த நிகழ்ச்சியில் தாசில்தார் பன்னீர் செல்வம் பள்ளி வாகன டிரைவர்கள், உரிமையா ளர்கள் அன்றாடம் கடைபிடிக்க வேண் டிய வழிமுறைகள் குறித்து பேசினார்.மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் விபத்துகளை தவிர்ப்பது குறித்து பேசினர்.

Read more »

கடலூரில் சுதந்திர தினவிழா: பல பள்ளிகள் "ஆப்சென்ட்'

கடலூர்: 

             கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்த சுதந்திரதின விழா நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் பங்கேற் பது குறைந்து வருகிறது.

             மாணவ பருவத்திலேயே நாட்டுப்பற்றை விதைக்கும் வண்ணம் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பள்ளி மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டு சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தயார் செய்யப்படுவது வழக்கம். இவர்கள் மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் பள்ளிகள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் செய்து காண்பித்து கலெக்டரிடம் பாராட்டு சான்றிதழ்கள் பெறுவர். 

                     இதன் மூலம் சக மாணவர்களுக்கும் நாட்டுப் பற்று பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்.ஆனால் தற்போது அதிகாரிகளின் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் உள்ளூர் பள்ளிகளைத் தவிர மற்ற பள்ளிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் சுதந்திர தினவிழாவின் தொடக்க நேரத்தில் மக்கள் கூட்டம் இல்லாமல் "டல்லடித்ததால்' ஏற்பாடு செய்த அதிகாரிகள் கவலையடைந்தனர்.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியை கூறியது, 

                "மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் கடலூர் விழாவிற்கு வருகை தர வாகன வசதி செய்து தருவதில்லை. செலவுகளை அந்தந்த பள்ளிகளே மேற்கொள்ள வேண்டியிருப்பதால் பெரும்பாலான பள்ளிகள் பங்கேற்க முன்வருதில்லை' என்றார். இனி வரும் காலங்களிலாவது மாணவ மாணவியர்கள் மனதில் நாட்டுப் பற்றை ஏற்படுத்துவும், அவர்களை குதூகளிக்கச் செய்யவும் அதிகாரிகள் வழிகாட்டவேண்டும்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு சிறப்பு நிதி வழங்குவதில் தாமதம்

கடலூர்: 

                அரசு பள்ளிகளுக்கு இந்த ஆண்டிற்கான சிறப்பு நிதியை அரசு இதுவரை வழங்காததால் மாவட்ட அளவிலான குறுவட்ட போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 
              ஆண்டு தோறும் பள்ளி துவங்கும்போது மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடம் சிறப்புக் கட்டணம் நிதி வசூலிக்கப்பட்டு அந்தத் தொகையில் இருந்து விளையாட்டு, அறிவியல், நூலகம், ஒளி - ஒலி கல்வி, செஞ்சிலுவைச் சங்கம், சாரணர் சங்கம், இலக்கியம், எழுது பொருள் ஆகிவற்றிற்கு செலவு செய்யப் படும். அதில் பிளஸ் 1 மற் றும் பிளஸ் 2 மாணவர்கள் 30 ரூபாயும், 9, 10ம் வகுப்பு மாணவர்கள் 20 ரூபாயும், 6, 7, 8ம் வகுப்பு மாணவர் கள் 10 ரூபாயும் கட்டணமாக செலுத்தினர்.

                   எஸ்.சி., மாணவர்களுக்கு மட்டும் அரசே செலுத்தி வந்தது. இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் விளையாட்டு கட்டணத்தை அரசே செலுத்துவதாக அறிவித்தது. அந்த நிதி மூலம் தான் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குறு மையம், கல்வி மாவட் டம், கடலூர் மண்டலம், மாநில அளவில் உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு குடியரசு தின விளையாட்டு, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாரதியார் தின விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுவோருக்கு வழங்கப்படும் சான்றிதழ், தொழில் கல்வியில் முன் னுரிமை வழங்கப்படும்.

               இந்நிலையில் கடலூர் கல்வி மாவட்ட விளையாட்டுக் கழகத்தின் சார்பில் குறு வட்ட மகளிர் விளையாட்டு போட்டிகள் அடுத்த வாரம் கடலூரில் துவங்க உள்ளது. 30ம் தேதி ஆண்களுக்கான குறுவட்ட போட்டிகள் துவங்குகிறது. கடலூர் கல்வி மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குறு வட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளது. 

            அதேப்போல் விருத்தாசலம் கல்வி மாவட்டத்திற்கு விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில் ஆகிய இடங்களில் குறு வட்ட போட்டிகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்கள் கல்வி மாவட்ட அளவிலும், பின்னர் மண் டலம் மற்றும் மாநில அள விலான போட்டிகளில் பங்கேற்பர். பள்ளி துவங்கியதுமே சிறப்பு நிதி தேவை பற்றிய தேவைப் பட்டியல் அரசுப் பள்ளிகளில் கோரப்படும். ஆனால், பள்ளிகள் துவங்கி மூன்று மாதங்கள் ஆன நிலையில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் இதுவரை எந்த அரசுப் பள்ளிகளிலும் விளையாட்டு உப கரணங்களை வாங்கப்படவில்லை. 

                      இதனால் மாணவ, மாணவிகள் போதிய பயிற்சி பெற முடியாத நிலை உள்ளது. தற்போதுதான் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் மாணவ, மாணவிகளின் எண் ணிக்கை, எந்தெந்த பள்ளிக்கு எவ்வளவு நிதி தேவை என்ற பட்டியலை அரசு கேட்டுள்ளது. இப்பட்டியல்கள் அனைத்தும் வழங்கப்பட்ட பின் தான் பள்ளிக்கான சிறப்பு நிதியை அரசு வழங்கும். குறு வட்ட போட்டிகள் விரைவில் துவங்க உள்ள நிலையில் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் சொந்த பணத்தில் மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை வாங்கிக் கொடுத்துள்ளனர். அதன் மூலம் சில பள்ளி மாணவர்கள் மட்டுமே பயிற்சி பெற்று வருகின்றனர். பள்ளி சிறப்பு நிதியை அரசு உடனே வழங்க ஏற் பாடு செய்ய வேண்டும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior