உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 16, 2010

கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு சிறப்பு நிதி வழங்குவதில் தாமதம்

கடலூர்: 

                அரசு பள்ளிகளுக்கு இந்த ஆண்டிற்கான சிறப்பு நிதியை அரசு இதுவரை வழங்காததால் மாவட்ட அளவிலான குறுவட்ட போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 
              ஆண்டு தோறும் பள்ளி துவங்கும்போது மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடம் சிறப்புக் கட்டணம் நிதி வசூலிக்கப்பட்டு அந்தத் தொகையில் இருந்து விளையாட்டு, அறிவியல், நூலகம், ஒளி - ஒலி கல்வி, செஞ்சிலுவைச் சங்கம், சாரணர் சங்கம், இலக்கியம், எழுது பொருள் ஆகிவற்றிற்கு செலவு செய்யப் படும். அதில் பிளஸ் 1 மற் றும் பிளஸ் 2 மாணவர்கள் 30 ரூபாயும், 9, 10ம் வகுப்பு மாணவர்கள் 20 ரூபாயும், 6, 7, 8ம் வகுப்பு மாணவர் கள் 10 ரூபாயும் கட்டணமாக செலுத்தினர்.

                   எஸ்.சி., மாணவர்களுக்கு மட்டும் அரசே செலுத்தி வந்தது. இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் விளையாட்டு கட்டணத்தை அரசே செலுத்துவதாக அறிவித்தது. அந்த நிதி மூலம் தான் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குறு மையம், கல்வி மாவட் டம், கடலூர் மண்டலம், மாநில அளவில் உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு குடியரசு தின விளையாட்டு, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாரதியார் தின விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுவோருக்கு வழங்கப்படும் சான்றிதழ், தொழில் கல்வியில் முன் னுரிமை வழங்கப்படும்.

               இந்நிலையில் கடலூர் கல்வி மாவட்ட விளையாட்டுக் கழகத்தின் சார்பில் குறு வட்ட மகளிர் விளையாட்டு போட்டிகள் அடுத்த வாரம் கடலூரில் துவங்க உள்ளது. 30ம் தேதி ஆண்களுக்கான குறுவட்ட போட்டிகள் துவங்குகிறது. கடலூர் கல்வி மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குறு வட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளது. 

            அதேப்போல் விருத்தாசலம் கல்வி மாவட்டத்திற்கு விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில் ஆகிய இடங்களில் குறு வட்ட போட்டிகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்கள் கல்வி மாவட்ட அளவிலும், பின்னர் மண் டலம் மற்றும் மாநில அள விலான போட்டிகளில் பங்கேற்பர். பள்ளி துவங்கியதுமே சிறப்பு நிதி தேவை பற்றிய தேவைப் பட்டியல் அரசுப் பள்ளிகளில் கோரப்படும். ஆனால், பள்ளிகள் துவங்கி மூன்று மாதங்கள் ஆன நிலையில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் இதுவரை எந்த அரசுப் பள்ளிகளிலும் விளையாட்டு உப கரணங்களை வாங்கப்படவில்லை. 

                      இதனால் மாணவ, மாணவிகள் போதிய பயிற்சி பெற முடியாத நிலை உள்ளது. தற்போதுதான் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் மாணவ, மாணவிகளின் எண் ணிக்கை, எந்தெந்த பள்ளிக்கு எவ்வளவு நிதி தேவை என்ற பட்டியலை அரசு கேட்டுள்ளது. இப்பட்டியல்கள் அனைத்தும் வழங்கப்பட்ட பின் தான் பள்ளிக்கான சிறப்பு நிதியை அரசு வழங்கும். குறு வட்ட போட்டிகள் விரைவில் துவங்க உள்ள நிலையில் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் சொந்த பணத்தில் மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை வாங்கிக் கொடுத்துள்ளனர். அதன் மூலம் சில பள்ளி மாணவர்கள் மட்டுமே பயிற்சி பெற்று வருகின்றனர். பள்ளி சிறப்பு நிதியை அரசு உடனே வழங்க ஏற் பாடு செய்ய வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior