உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 16, 2010

கடலூரில் சுதந்திர தினவிழா: பல பள்ளிகள் "ஆப்சென்ட்'

கடலூர்: 

             கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்த சுதந்திரதின விழா நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் பங்கேற் பது குறைந்து வருகிறது.

             மாணவ பருவத்திலேயே நாட்டுப்பற்றை விதைக்கும் வண்ணம் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பள்ளி மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டு சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தயார் செய்யப்படுவது வழக்கம். இவர்கள் மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் பள்ளிகள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் செய்து காண்பித்து கலெக்டரிடம் பாராட்டு சான்றிதழ்கள் பெறுவர். 

                     இதன் மூலம் சக மாணவர்களுக்கும் நாட்டுப் பற்று பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்.ஆனால் தற்போது அதிகாரிகளின் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் உள்ளூர் பள்ளிகளைத் தவிர மற்ற பள்ளிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் சுதந்திர தினவிழாவின் தொடக்க நேரத்தில் மக்கள் கூட்டம் இல்லாமல் "டல்லடித்ததால்' ஏற்பாடு செய்த அதிகாரிகள் கவலையடைந்தனர்.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியை கூறியது, 

                "மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் கடலூர் விழாவிற்கு வருகை தர வாகன வசதி செய்து தருவதில்லை. செலவுகளை அந்தந்த பள்ளிகளே மேற்கொள்ள வேண்டியிருப்பதால் பெரும்பாலான பள்ளிகள் பங்கேற்க முன்வருதில்லை' என்றார். இனி வரும் காலங்களிலாவது மாணவ மாணவியர்கள் மனதில் நாட்டுப் பற்றை ஏற்படுத்துவும், அவர்களை குதூகளிக்கச் செய்யவும் அதிகாரிகள் வழிகாட்டவேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior