உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 04, 2009

திறன் வளர்த்தல் அடிப்படை பயிற்சி

அண்ணாமலைநகர்:

சிதம்பரத்தை அடுத்த டி. புத்தூர் அரசு ஆதிதிராவிட நல துவக்கப்பள்ளியில் பிற்படுத்தப்பட்ட பகுதி மானிய நிதி திறனறிதல் பயிற்சி நான்கு நாட்கள் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், உதவியாளர்களுக்கு முழுசுகாதாரம், எய்ட்ஸ் விழிப்புணர்வு, மகளிர் மேம்பாடு ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

                     மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவன விரிவுரையாளர் வீரராகவன் பயிற்சியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பயிற்சி பெற்றவர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் சான்றிதழ் வழங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமு பயிற்சியை ஒருங்கிணைந்து நடத்தினார். டி. புத்தூர் ஆட்கொண்டநத்தம், செட்டிகட்டளை, பரிவிளாகம், நெடும்பூர் ஊராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள், உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த அறந்தாங்கியில் உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு திறன் வளர்த்தல் பயிற்சி நடந்தது.
மாநில ஊரக வளர்ச்சி துறை வீரராகவன் தலைமை தாங்கி பயிற்சி
யளித்தார். விரிவாக்க அலுவலர் சமூக நல வனசுந்தரி முன்னிலை வகித்தார். இப்பயிற்சி வகுப்பினை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜாராமன் துவக்கி வைத்து ஆலோசனை வழங்கினார். வானமாதேவி, அகரபுத்து£ர், கருணாகரநல்லு£ர், சித்தமல்லி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள், மக்கள் நலப்பணியாளர்கள், எழுத்தர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


பயிற்சியில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு என பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

Read more »

திட்டக்குடி பகுதியில் அலுமினிய கம்பிகள் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை

திட்டக்குடி:

         திட்டக்குடியை அடுத்த ஆவினங்குடியை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் வசந் தன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் செந்தில், வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் ராம சாமி உள்ளிட்ட 10 பேரின் விளைநிலத்தில் இருந்த நீர்மூழ்கி மற்றும் மின்மோட்டாரின் அலுமினிய மின் கம்பிகள் திருட்டு போயிருந்தன. நேற்று  காலை வய லுக்கு சென்றவர்கள் மின் கம்பி திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து ஆவினங்குடி போலீசார் வழங்கு பதிவு செய்து மின் கம்பி திருடியவர்களை தேடி வருகின்றனர். மதிப்பு ரூ. 60 ஆயிரம் ஆகும். திட்டக்குடி, ஆவினங் குடி, பட்டூர், கோழியூர் உள்ளிட்ட 10க்கும் மேற் பட்ட கிராமங்களில் தொடர்ந்து நடந்து மின்கம்பிகள் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more »

கிலோ ரூ.44 ஆனது கத்திரிக்காய் விலை கிடுகிடு உயர்வு

கடலூர்:

கடலூரில் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. கத்திரிக்காய் கிலோ ரூ.44 க்கு விற்கப்படுகிறது. வட கிழக்கு பருவ மழை காரணமாக கடந்த மாதத்தில் தொடர்ந்து கன மழை பெய்தது. தற்போதும் விட்டு, விட்டு பெய்து வருகிறது. காய்கறி விளைச்சல் உள்ள பகுதிகளில் பலத்த மழை காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு, குறைவான அளவுக்கு காய்கறிகள் வரத்து வந்துகொண்டிருக்கிறது. இதனால் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


                நீலகிரி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் பெய்யும் மழைக்காரணமாக அங்கிருந்து வரும் உருளை, பீன்ஸ், சவ்சவ், இஞ்சி, கருணை, பீட்ருட், கேரட் ஆகிய காய்கறிகள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. ஈரோடு பகுதி யில் கனமழை காரணமாக கத்திரிக்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கத்திரிக்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடைகளில் ரூ. 14க்கு விற்கப்பட்ட கத்திரிக்காய் தற்போது கிலோ ஒன்று ரூ.44க்கு விற்கப்படுகிறது. மழை காரணமாக நாணமேடு, கண்டக்காடு உள்ளிட்ட கிராமங்களில் கத்திரிக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுவிட்டதால் உள்ளூர் கத்திரிக்காயும் மார்க்கெட்டுக்கு வரவில்லை. இதுவும் கத்திரிக்காய் விலை உயர்வுக்கு கூடுதல் காரணம் என்கின்றனர் காய்கறி வியாபாரிகள்.

        இதனால் கத்திரிக்காய் பிரியர்கள் 100 கிராம், 200 கிராம் என குறைந்த அளவில் கத்திரிகாயை வாங்கிச் செல்கின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior