உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 04, 2009

கிலோ ரூ.44 ஆனது கத்திரிக்காய் விலை கிடுகிடு உயர்வு

கடலூர்:

கடலூரில் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. கத்திரிக்காய் கிலோ ரூ.44 க்கு விற்கப்படுகிறது. வட கிழக்கு பருவ மழை காரணமாக கடந்த மாதத்தில் தொடர்ந்து கன மழை பெய்தது. தற்போதும் விட்டு, விட்டு பெய்து வருகிறது. காய்கறி விளைச்சல் உள்ள பகுதிகளில் பலத்த மழை காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு, குறைவான அளவுக்கு காய்கறிகள் வரத்து வந்துகொண்டிருக்கிறது. இதனால் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


                நீலகிரி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் பெய்யும் மழைக்காரணமாக அங்கிருந்து வரும் உருளை, பீன்ஸ், சவ்சவ், இஞ்சி, கருணை, பீட்ருட், கேரட் ஆகிய காய்கறிகள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. ஈரோடு பகுதி யில் கனமழை காரணமாக கத்திரிக்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கத்திரிக்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடைகளில் ரூ. 14க்கு விற்கப்பட்ட கத்திரிக்காய் தற்போது கிலோ ஒன்று ரூ.44க்கு விற்கப்படுகிறது. மழை காரணமாக நாணமேடு, கண்டக்காடு உள்ளிட்ட கிராமங்களில் கத்திரிக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுவிட்டதால் உள்ளூர் கத்திரிக்காயும் மார்க்கெட்டுக்கு வரவில்லை. இதுவும் கத்திரிக்காய் விலை உயர்வுக்கு கூடுதல் காரணம் என்கின்றனர் காய்கறி வியாபாரிகள்.

        இதனால் கத்திரிக்காய் பிரியர்கள் 100 கிராம், 200 கிராம் என குறைந்த அளவில் கத்திரிகாயை வாங்கிச் செல்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior