உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 21, 2009

விழிப்புணர்வு ஊர்வலம்

விருத்தாசலம் :

       விருத்தாசலத்தில் மின் வாரியம் சார்பில் நடந்த மின் சிக்கனம் மற்றும் சேமிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.


             செயற்பொறியாளர் சிவராஜ் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் கள் சுகன்யா, பத்மாவதி, அசோக்பிரன்னா முன் னிலை வகித்தனர். ஊர்வலத்தில் மின் சிக்கனத்தை வலியுறுத்திய பாதகைகளை ஏந்தியபடி ஊழியர்கள் நகரின் முக்கிய வீதிகளில் சென்றனர். மின்சாரத்தை சேமிக்கும் வழிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. உதவி செயற்பொறியா ளர்கள் கிருஷ்ணன், பாலசுப்ரமணியன், ஜெயகாந் தன் மற்றும் அனைத்து உதவி மின்பொறியாளர் கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.  

Read more »

இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

கடலூர் :

       தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

              கடலூர் உழவர் சந்தை அருகில் நடந்த ஆர்ப்பாட் டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலா ளர் மணிவாசகம் கோரிக் கைகளை விளக்கி பேசினார். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட துணை செயலாளர் சேகர், மாநிலக்குழு நாகராஜன், கோவிந்தசாமி, பட்டுசாமி, சுப்ரமணியன், செல்வராசு, சம்பந்தம் உட்பட பலர் பேசினர். நகர செயலாளர் குளோப் நன்றி கூறினார்.

Read more »

கிணற்றில் விழுந்த பெண் பலி

நெல்லிக்குப்பம் :

              மனநலம் பாதித்த பெண் கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். நெல்லிக்குப்பம் அடுத்த மூலக்குப்பத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகள் சீதை (16). மனநலம் பாதித்த இவர், நேற்று  காலை தங்களது நிலத்திற்கு சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். நெல்லிக்குப்பம் தீயணைப்பு  படை வீரர்கள் விரைந்து சென்று சீதாவின் உடலை மீட்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior