உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 06, 2010

கின்னஸில் இடம்பெறத் தகுதி படைத்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம்


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற வெள்ளிவிழா நிகழ்ச்சியில் பேசுகிறார் இணைவேந்தர் எம்.ஏ.எம். ராமசாமி
 
சிதம்பரம்:
 
                  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற தகுதி உள்ளதாக பத்மபூஷன் விருது பெற்ற பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் என். ரங்கபாஷ்யம் தெரிவித்தார். இப்பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு துறையும் வெள்ளி விழா, வைர விழா, பவள விழாக்களைக் கொண்டாடியதன் மூலம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற தகுதி பெற்றுள்ளதாக அவர் கூறினார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி வெள்ளிவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
 
இதில் டாக்டர் ரங்கபாஷ்யம் மேலும் பேசியது: 
 
                 ஒடுக்கப்பட்ட பகுதியான கடலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த மருத்துவக் கல்லூரியில் அனைத்து வசதிகளும் உள்ளது. அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம், சஞ்சய்காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிகல் சயன்ஸ், மெட்ராஸ் மெடிக்கல் சென்டர் ஆகியவற்றுக்கு இணையான தரத்தில் இந்த மருத்துவக் கல்லூரி நவீன உபகரணங்களுடன் சிறந்து விளங்குகிறது.  இப்போது மருத்துவம் பயிலும் மாணவர்கள் கிராமப்புறங்களில் ஓராண்டு கட்டாயம் பயிற்சி பெற வேண்டும் என இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த மருத்துவக் கல்லூரி கிராமப்புற பகுதியில் அமைந்து அம்மக்களுக்கு பயிற்சி அளிப்பதால் அந்த தகுதியையும் இங்கு பயிலும் மாணவர்கள் பெற்று விடுகின்றனர். 
 
இவ்விழாவில் முன்னாள் துணைவேந்தர்கள், மருத்துவப்புல முதல்வர்கள், மருத்துவமனை முன்னாள் கண்காணிப்பாளர்கள் ஆகியோரை கௌரவித்து இணைவேந்தர் எம்.ஏ.எம். ராமசாமி எம்.பி. கூறியது: 
 
                 அண்ணாமலைப் பல்கலையில் பல் மருத்துவக் கல்லூரியாக தொடங்கப்பட்டு அது மருத்துவக்கல்லூரியாக அமைக்கப்பட்டது. தமிழகத்தில் முதல்முதலாக தொடங்கப்பட்ட 3 மருத்துவக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட பகுதியில் தொடங்கப்பட்டது ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியாகும். பல்வேறு இன்னல்களுக்கிடையே இந்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இக்கல்லூரிகளை அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். இங்கு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தொடங்க மருத்துவர்கள் கொண்ட குழுவை மணிப்பால் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்ட பின்னரே இங்கு மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டது என்றார் இணைவேந்தர். 
 
முன்னாள் துணைவேந்தர் எஸ்.வி. சிட்டிபாபு வாழ்த்துரை வழங்கி பேசியது: 
 
                இந்த மருத்துவமனையில் 27 வகையான வசதிகள் உள்ளது. மேலும் இங்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை அமைக்க வேண்டும். மருத்துவத்துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும், தரம் வாய்ந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் கல்வி பரிமாற்ற ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். முன்னதாக மருத்துவப்புல முதல்வர் டாக்டர் என். சிதம்பரம் வரவேற்றார். 
 
                    பதிவாளர் எம். ரத்தினசபாபதி வாழ்த்துச் செய்திகளை படித்தார். துணைவேந்தர் எம். ராமநாதன் தலைமை தாங்கினார். விழா ஒருங்கிணைப்பாளர் எஸ். ரமேஷ் வெள்ளிவிழா அறிக்கையை படித்தார்.  இந்நிகழ்ச்சியின்போது என். ரங்கபாஷ்யம் பெயரில்  50ஆயிரத்துக்கு இணைவேந்தர் எம்.ஏ.எம். ராமசாமி அறக்கட்டளை ஒன்றை நிறுவியுள்ளதாக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் அறிவித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.விஸ்வநாதன் நன்றி கூறினார்.

Read more »

நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ., முயற்சியில் விடப்பட்ட அரசு பஸ் அடிக்கடி ஆப்சென்ட்

நடுவீரப்பட்டு : 

                சாத்திப்பட்டு மற்றும் நடுவீரப்பட்டு பகுதிக்கு நெல்லிக்குப்பம் எம். எல்.ஏ., முயற்சியால் விடப்பட்ட அரசு பஸ் அடிக்கடி "ஆப்சென்ட்' ஆவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். 

                  பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டிலிருந்து கடலூர் செல்ல பஸ் வசதி இல்லாததால் அப்பகுதி மாணவ, மாணவிகள் மற் றும் வேலைக்கு செல்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இது குறித்து எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரனிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் சாத்திப்பட்டிலிருந்து  சி.என்.பாளையம், நடுவீரப்பட்டு, பாலூர் வழியாக கடலூருக்கு அரசு டவுன் பஸ் (தடம் எண். 27 எஸ்) காலை மற்றும் மாலை என இரு வேளை இயக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் கொஞ்ச நாட்கள் மட்டுமே மகிழ்ச்சி நீடித்த நிலையில் தற் போது எவ்வித முன் அறிவிப்புமின்றி மாதத்தின் பல நாட்கள் பஸ் இயக்கப்படுவதே இல்லை.

                 திடீரென பஸ் நிறுத்தப்படுவதால் இப் பகுதியைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற் றும் வேலைக்குச் செல்பவர்கள் காத்து கிடந்து ஏமாற்றத்துடன் அடுத்த பஸ் பிடித்துச் செல்ல 10 மணிக்கு மேல் ஆகிறது. ஒவ்வொரு நாளும் பஸ் வருமோ? வராதோ? என சந்தேகத்தின் பேரிலேயே பஸ் நிறுத்தத்தில் காத்துக் கிடக்க வேண்டிய அவலநிலை உள்ளது. 

                        எம்.எல்.ஏ., முயற்சியால் விடப்பட்ட அரசு பஸ் முறையாக இயக்கப்படாமல் இருப்பது அப்பகுதி மக்களை வேதனையடையச் செய்துள்ளது. மேலும் சாத்திப்பட்டிலிருந்து கடலூர் செல்லும் ஒரே அரசு பஸ் இதுதான் என்பதால் இந்த பஸ்சை காலை முதல் இரவு வரை இதே வழி தடத்தில் தொடர்ந்து இயக்க எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கடலூரில் மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில்10 லட்சம் நலத்திட்ட உதவிகள்

கடலூர்:

             கடலூரில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில், |10.25 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வழங்கினார்.

               மக்கள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது. பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 380 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 11 பேருக்கும், பிற்பட்டோர் நலத்துறை மூலம் 15 பேருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், மாற்றுத் திறனாளிகள் 17 பேருக்கு தலா |3ஆயிரம் வீதம், தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன், ஒருவருக்கு 3 சக்கர வண்டி, எய்ட்ஸ் பாதித்த 58 குழந்தைகளுக்கு 1.21 லட்சம் கல்வி உதவித் தொகை, மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். கூட்டத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior