உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 02, 2011

கடலூர் தபால்துறை ரூ. 5 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நீதிமன்ற உத்தரவு

கடலூர்:

              அஞ்சல் அலுவலகத்தில் டெபாசிட் செய்த தொகையைப் பெறுவதில் எழுந்த பிரச்னை காரணமாக, சேவைக் குறைபாட்டுக்காக, பெண்ணுக்கு கடலூர் தலைமை அஞ்சல் நிலையம், வட்டியுடன் ரூ. 5 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று, கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

                  கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் வசீகரனின் மனைவி குணமலர். 2004-ம் ஆண்டு அவர், புதுவை அஞ்சல் நிலையத்தில் ரூ. 60 ஆயிரம் டெபாசிட் செய்து இருந்தார். பின்னர் அந்த டெபாசிட்டை கடலூர் தலைமை அஞ்சல் நிலையத்துக்கு மாற்றினார். டெபாசிட் முதிர்வடைந்தபோது, பணத்தைப் பெற்றுக் கொள்ள தனது கணவர் வசீகரனுக்கு அதிகாரம் அளித்து இருந்தார். கடலூர் தலைமை அஞ்சல் நிலையத்துக்கு வசீகரன் சென்று, டெபாசிட் தொகையைக் கேட்டதற்கு, புதுவையில் டெபாசிட் செய்தபோது பெறப்பட்ட மாதிரிக் கையொப்பம் மற்றும் டெபாசிட் செய்ததற்கான விண்ணப்பம் ஆகியவை புதுவையில் இருந்து வரவில்லை. 

              எனவே அவற்றை வசீகரன்தான் சென்று பெற்றுவர வேண்டும் என்றும் கூறிவிட்டனராம். இதனால் உடனடியாக டெபாசிட் தொகையைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டது.இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் மூலமாக விளக்கம் கேட்டுக் கடிதம் எழுதியும், அஞ்சல் நிலையம் டெபாசிட் தொகையை அளிக்க முன்வரவில்லை.எனவே வசீகரன், குணமலர் ஆகியோர் கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி கணேசன், உறுப்பினர்கள் கலையரசி ராமதாஸ், பாண்டியன் ஆகியோர் விசாரித்து, அண்மையில் தீர்ப்புக் கூறினர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவைக் குறைபாட்டினால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கான நஷ்டஈடாக ரூ. 3 ஆயிரம், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 2 ஆயிரம், டெபாசிட் தொகையை திருப்பித் தரும் வரை, அத்தொகைக்கு சாதாரண வட்டியும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

             இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் ஆஜராகி வாதாடினார்.2008-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. வாகன ஆர்.சி.புத்தகம் தரமறுத்த வங்கிகடன் முழுவதையும் செலுத்திய பிறகும், வாகனத்துக்கான ஆர்.சி. புத்தகத்தைத் தரமறுத்த எச்.டி.எப்.சி. வங்கி, ரூ. 5 ஆயிரம் நஷ்டஈடு வழங்க கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

                 கடலூர் செல்லங்குப்பத்தைச் சேர்ந்த அருணாச்சலம். எச்.டி.எப்.சி. வங்கியில் கடன் பெற்று, இருசக்கர வாகனம் வாங்கினார். கடன் தொகை முழுவதையும் திருப்பிச் செலுத்திய பிறகும், அவருக்கு வாகனப் பதிவுச் சான்றை (ஆர்.சி. புத்தகம்) எச்.டி.எப்.சி. வங்கி திருப்பி வழங்கவில்லை. இது தொடர்பாக கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் அருணாச்சலம் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு சம்மன் அனுப்பியும் எச்.டி.எப்.சி. வங்கி அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.எனவே பாதிக்கப்பட்டவருக்கு வாகனப் பதிவுச் சான்றை உடனே வழங்க வேண்டும். 

               மன உளைச்சலுக்காக ரூ. 3 ஆயிரம், வழக்கு செலவுக்காக ரூ. 2 ஆயிரமும், எச்.டி.எப்.சி. வங்கி வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த வழக்கிலும் பாதிக்கப்பட்டவர் சார்பில் எம்.நிஜாமுதீன் ஆஜரானார்.

Read more »

தமிழகத்தில் 40 அரசு மருத்துவமனைகளில் சிசு மருத்துவ மையங்கள்

கடலூர்:

         தமிழகத்தில் உள்ள 40 அரசு மருத்துவமனைகளில் சிசு மருத்துவ மையங்கள் (பச்சிளங் குழந்தை தீவிர சிகிச்சை, கண்காணிப்புப் பிரிவு) தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

                ஒரு மையம் தொடங்க தலா ரூ. 25 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை செலவாகும் என்றார். மாநிலத்தில் 7-வதாக, கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.25 லட்சத்தில் தொடங்கப்பட்டுள்ள, சிசு மருத்துவ மையத்தை அமைச்சர் பன்னீர்செல்வம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். 

அப்போது அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியது: 

             தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் 31 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக குறைந்துள்ளது. இப் பிரிவு தொடங்கப்பட்டு வருவதன் மூலம், குழந்தைகள் இறப்பு விகிதம் மேலும் குறையும். குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான நவீன கருவிகள் இடம்பெறுவதுடன் குழந்தைகளுக்குச் சிறந்த சிகிச்சை இந்த சிசு மையங்களில் வழங்கப்படும்.  ஒரு வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் வரை அரசு,  தனியார் சிகிச்சை பெறுவதற்கான திட்டத்தை, முதல்வர் கருணாநிதி கடந்த 27-ம் தேதி தொடங்கி வைத்தார். 

               இதுவும் குழந்தைகள் இறப்பு விகிதத்தை வெகுவாகக் குறைக்கும். தமிழகத்தில் 27-ம் தேதி 66.10 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டுள்ளது.  கடலூர், காட்டுமன்னர்கோயில் அரசு மருத்துவமனைகளில் தலா ரூ. 1.50 கோடியிலும், சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு ரூ. 2.90 கோடியிலும் புறநோயாளிகள் பிரிவு, அறுவைச் சிகிச்சை அரங்குகள் கட்டுவதற்கு, துணை முதல்வர் கடந்த 13-ம் தேதி அடிக்கல் நாட்டினார். திங்கள்கிழமை அந்தக் கட்டங்கள் கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டு உள்ளது என்றார் அமைச்சர்.  

            நிகழ்ச்சியில் கடலூர் எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன், கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், மருத்துவம், ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜா, கடலூர் மருத்துவத் துறை இணை இயக்குநர் கமலக்கண்ணன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஆர்.மீரா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் மனோகரன், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Read more »

சிதம்பரத்தில் இன்று 30வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா





சிதம்பரம் : 

           சிதம்பரம் நடராஜர் கோவிலில், 30வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா, இன்று துவங்குகிறது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், 1981 முதல், 29 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட, பல்வேறு நாடுகளில் இருந்தும் நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று நாட்டிய திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு, 30வது நாட்டியாஞ்சலி விழா, இன்று துவங்கி, 6ம் தேதி வரை நடக்கிறது. டில்லி சங்கீத நாடக அகடமி தலைவர் லீலா சாம்சன் துவக்கி வைக்கிறார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior