உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 02, 2011

கடலூர் தபால்துறை ரூ. 5 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நீதிமன்ற உத்தரவு

கடலூர்:

              அஞ்சல் அலுவலகத்தில் டெபாசிட் செய்த தொகையைப் பெறுவதில் எழுந்த பிரச்னை காரணமாக, சேவைக் குறைபாட்டுக்காக, பெண்ணுக்கு கடலூர் தலைமை அஞ்சல் நிலையம், வட்டியுடன் ரூ. 5 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று, கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

                  கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் வசீகரனின் மனைவி குணமலர். 2004-ம் ஆண்டு அவர், புதுவை அஞ்சல் நிலையத்தில் ரூ. 60 ஆயிரம் டெபாசிட் செய்து இருந்தார். பின்னர் அந்த டெபாசிட்டை கடலூர் தலைமை அஞ்சல் நிலையத்துக்கு மாற்றினார். டெபாசிட் முதிர்வடைந்தபோது, பணத்தைப் பெற்றுக் கொள்ள தனது கணவர் வசீகரனுக்கு அதிகாரம் அளித்து இருந்தார். கடலூர் தலைமை அஞ்சல் நிலையத்துக்கு வசீகரன் சென்று, டெபாசிட் தொகையைக் கேட்டதற்கு, புதுவையில் டெபாசிட் செய்தபோது பெறப்பட்ட மாதிரிக் கையொப்பம் மற்றும் டெபாசிட் செய்ததற்கான விண்ணப்பம் ஆகியவை புதுவையில் இருந்து வரவில்லை. 

              எனவே அவற்றை வசீகரன்தான் சென்று பெற்றுவர வேண்டும் என்றும் கூறிவிட்டனராம். இதனால் உடனடியாக டெபாசிட் தொகையைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டது.இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் மூலமாக விளக்கம் கேட்டுக் கடிதம் எழுதியும், அஞ்சல் நிலையம் டெபாசிட் தொகையை அளிக்க முன்வரவில்லை.எனவே வசீகரன், குணமலர் ஆகியோர் கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி கணேசன், உறுப்பினர்கள் கலையரசி ராமதாஸ், பாண்டியன் ஆகியோர் விசாரித்து, அண்மையில் தீர்ப்புக் கூறினர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவைக் குறைபாட்டினால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கான நஷ்டஈடாக ரூ. 3 ஆயிரம், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 2 ஆயிரம், டெபாசிட் தொகையை திருப்பித் தரும் வரை, அத்தொகைக்கு சாதாரண வட்டியும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

             இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் ஆஜராகி வாதாடினார்.2008-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. வாகன ஆர்.சி.புத்தகம் தரமறுத்த வங்கிகடன் முழுவதையும் செலுத்திய பிறகும், வாகனத்துக்கான ஆர்.சி. புத்தகத்தைத் தரமறுத்த எச்.டி.எப்.சி. வங்கி, ரூ. 5 ஆயிரம் நஷ்டஈடு வழங்க கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

                 கடலூர் செல்லங்குப்பத்தைச் சேர்ந்த அருணாச்சலம். எச்.டி.எப்.சி. வங்கியில் கடன் பெற்று, இருசக்கர வாகனம் வாங்கினார். கடன் தொகை முழுவதையும் திருப்பிச் செலுத்திய பிறகும், அவருக்கு வாகனப் பதிவுச் சான்றை (ஆர்.சி. புத்தகம்) எச்.டி.எப்.சி. வங்கி திருப்பி வழங்கவில்லை. இது தொடர்பாக கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் அருணாச்சலம் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு சம்மன் அனுப்பியும் எச்.டி.எப்.சி. வங்கி அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.எனவே பாதிக்கப்பட்டவருக்கு வாகனப் பதிவுச் சான்றை உடனே வழங்க வேண்டும். 

               மன உளைச்சலுக்காக ரூ. 3 ஆயிரம், வழக்கு செலவுக்காக ரூ. 2 ஆயிரமும், எச்.டி.எப்.சி. வங்கி வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த வழக்கிலும் பாதிக்கப்பட்டவர் சார்பில் எம்.நிஜாமுதீன் ஆஜரானார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior