உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 22, 2012

விருத்தாசலத்தில் தே.மு.தி.க.வினர் மோதல்: கட்சி அலுவலகம் சூறை

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/9d4cdf20-0b31-4b4b-b64b-d725ce437b62_S_secvpf.gif
விருத்தாசலம்:
       விருத்தாசலம் நகர தே.மு.தி.க. செயலாளராக பதவி வகித்து வந்தவர் சங்கர். சமீபத்தில் நகர செயலாளர் பதவியில் இருந்து சங்கர் மாற்றப்பட்டார். மாநில செயற்குழு உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார். மேலும் புதிய நகர செயலாளராக சரவணன், தலைவராக கார்த்திக், பொருளாளராக ரமேஷ் ஆகியோர் கடந்த 18-ந் தேதி நியமிக்கப்பட்டனர். இது சங்கரின் ஆதரவாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
          புதிய நிர்வாகிகள் முத்துக்குமார் எம்.எல்.ஏ.வின் பரிந்துரையின் பேரில் தான் நியமிக்கப்பட்டதாக சங்கரின் ஆதரவாளர்கள் எண்ணினர். இதனால் முத்துக்குமார் எம்.எல்.ஏ.வின் கொடும்பாவியை எரித்தனர். மேலும் முத்துகுமார் எம்.எல்.ஏ. வீட்டின் ஜன்னலை உடைத்தனர்.
     இதுகுறித்து முத்துக்குமார் எம்.எல்.ஏ. விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். புகாரில் சங்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10 பேர் தனது வீட்டு ஜன்னலை உடைத்ததாக கூறி இருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே செவ்வாய்கிழமை காலை சங்கரின் ஆதரவாளரான ஜல்லி செந்தில் என்பவர் முத்துக்குமார் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக பாலக்கரை ரவுண்டானாவில் கண்டன போஸ்டர் ஒட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த முத்துகுமார் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களான ஆசிரியர் பாஸ்கர், பாலமுருகன், சரவணன், ஜானகி ஆகியோர் ஜல்லி செந்திலை திட்டி தாக்கியதாக தெரிகிறது.
          மேலும் சங்கரின் ஆதரவாளரான வேல்முருகன் என்பவரின் காரையும் முத்துக்குமார் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விருத்தாசலம்-கடலூர் சாலையில் பொதுப் பணித்துறை ஆய்வு மாளிகை அருகே செயல்பட்டு வந்த சங்கரின் கட்சி அலுவலகத்தில் நள்ளிரவு மர்ம ஆசாமிகள் யாரோ புகுந்து அங்கிருந்த டி.வி., நாற்காலிகளை அடித்து உடைத்து சூறையாடினர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த சில ஆவணங்களையும் கிழித்து எறிந்து விட்டு சென்று விட்டனர். இன்று காலை இதனை பார்த்த சங்கரின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்தனர்.
        போலீசார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். விருத்தாசலத்தில் தே.மு.தி.க.வினரிடையே தொடர்ந்து மோதல் சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. 

Read more »

தமிழக அரசில் அரசியலில் மாற்றம்: வைகோ

சிதம்பரம்:
 
 சிதம்பரம் பி.முட்லூரில் நடந்த ம.தி.மு.க. பிரமுகர் இல்ல புதுமனை புகுவிழாவில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியது:-  
 
           ம.தி.மு.க.வுக்கு தற்போது ஒளிமயமான எதிர்காலம் உருவாகி இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் அதிக பாதிப்பு ஏற்பட்டு முந்திரி, பலா, வாழை, தென்னை மற்றும் நெற் பயிர்கள் அதிகமான பாதிப்பை ஏற்பட்டுத்தி இன்னும் 15 ஆண்டுகளுக்கு மக்கள் மத்தியில் இந்த அழிவு நீங்காத நிலையை ஏற்படுத்திவிட்டது.   பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு கான்கிரீட் வீடுகள் மட்டும் கட்டி கொடுக்காமல் அவர்களின் பொருளாதார நிலையையும் கருத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும்.
 
             தமிழக அரசில் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த நடைபெற உள்ள சங்கரன் கோவில் இடைத்தேர்தல் ம.தி.மு.க. மகத்தான வெற்றிபெற என்னை ஆசிர்வதித்து அனுப்புங்கள். இந்த இடைத்தேர்தலில் ஊழலை எதிர்த்து எழுச்சியான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த ம.தி.மு.க.வுக்கு மக்கள் கண்டிப்பாக ஒரு வாய்ப்பு தருவார்கள்.
 
கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதலாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் அரசு வழங்க வேண்டும்.
 
இவ்வாறு அவர் பேசினார்.
 
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் மோகனசுந்தரம், கந்தசாமி, மாவட்ட அவைத்தலைவர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

செவ்வாய், பிப்ரவரி 21, 2012

கொள்ளுக்காரன் குட்டை துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க்கில் கொள்ளை

பண்ருட்டி:
 
           பண்ருட்டி கொள்ளுக்காரன்குட்டை பெட்ரோல் பங்க் ஒன்றில் துப்பாக்கி முனையில் ரூ.55 ஆயிரம், ஞாயிற்றுக்கிழமை கொள்ளை அடிக்கப்பட்டது.
 
          கொள்ளையனைப் பிடிக்க முயன்ற லாரி ஓட்டுநர் கோபாலகிருஷ்ணன் குண்டு காயம் அடைந்தார். தப்பியோடிய இரு கொள்ளையர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.விருத்தாசலத்தை சேர்ந்த லதாவுக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் கொள்ளுக்காரன்குட்டையில் உள்ளது. சிலம்பிநாதன்பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன் (30), மீனாட்சிப்பேட்டையைச் சேர்ந்த சண்முகம் (45) ஆகியோர் சனிக்கிழமை இரவுப் பணியில் இருந்துள்ளனர்.
 
           ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணிக்கு மூன்று கொள்ளையர்கள் புகுந்து துப்பாக்கியால் தரையில் சுட்டும், கத்தியைக் காட்டி மிரட்டி, ஊழியர்களைக் கட்டிப் போட்டு விட்டு ரூ.55 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளையர்கள் சென்ற சற்று நேரத்தில் பாவைகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் கோபாலகிருஷ்ணன், டீசல் போட வந்துள்ளார். அப்போது ஊழியர்கள் இல்லாத நிலையில், பங்க்கின் உள்ளே சென்று பார்த்தபோது, ஊழியர்கள் கார்த்திகேயன், சண்முகம் இருவரும் கட்டப்பட்ட நிலையில் இருந்ததையும், ரூ.55 ஆயிரம் கொள்ளை போனது தெரிய வந்தது.உடனே லாரி ஓட்டுநர் கோபாலகிருஷ்ணன் தனது நண்பரான மருங்கூரைச் சேர்ந்த அருளுக்கு போன் செய்து கார் எடுத்து வரச் சொல்லி கொள்ளையர்களை பின் தொடர்ந்துள்ளனர். காடாம்புலியூர் காந்தி நகர் அருகே நடந்துச் சென்ற கொள்ளையர்களை கோபாலகிருஷ்ணன் பிடிக்க முயன்றார். அப்போது கொள்ளையர்கள் சுட்டதில் குண்டு பாய்ந்து கோபாலகிருஷ்ணன் காயம் அடைந்தனர்.
 
           சம்பவ இடத்துக்கு காடாம்புலியூர் போலீஸôர் விரைந்து வந்தனர். இதில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் மற்றும் போலீஸôர் துணிச்சலுடன் சென்று ஒரு கொள்ளையனை மடக்கிப் பிடித்தனர்.விசாரணையில், திருச்சியைச் சேர்ந்த செல்வம் என தெரிய வந்துள்ளது. ஏனைய இருவர் தப்பி ஓடி முந்திரிக் காட்டில் மறைந்துவிட்டனர். இவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
 
ஐ.ஜி., ஆய்வு: 
 
        தகவல் அறிந்த வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் பி.சைலேந்திரபாபு, காடாம்புலியூர் காவல் நிலையத்துக்கு விரைந்தார்.
 
பின்னர் வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் பி.சைலேந்திரபாபு அளித்த பேட்டி
 
         முந்திரிக் காட்டில் மறைந்த இரு கொள்ளையர்களைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் .கொள்ளையனைப் பிடித்த காவல்துறையினரை பாராட்டினார். பின்னர் கொள்ளை நடந்த பெட்ரோல் பங்க்கையும், கொள்ளையர்கள் தப்பிச் சென்ற முந்திரிக் காட்டையும் பார்வையிட்டார்.மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பி.பகலவன், பண்ருட்டி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஆரோக்கியம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior