உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 05, 2010

முற்றுகைப் போராட்டம்: 2025 என்.எல்.சி. தொழிலாளர்கள் கைது



என்எல்சி முதல் சுரங்கம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்த ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் தலைமையில் ஊர்வலமாகச் செல்லும் ஒப்பந்தத் தொழிலாளர்கள்.
 
நெய்வேலி:
 
              என்எல்சி தலைமை அலுவலகம் மற்றும் முதல் சுரங்க வாயில் முன் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்திய 2025 ஒப்பந்தத் தொழிலாளர்களை நெய்வேலி போலீஸôர் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.  
 
                என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி செப்டம்பர் 19 இரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் நடைபெற்ற 7 சுற்றுப் பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது.  ÷இந்நிலையில் போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கத்துடன் ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் தலைமையில் ஒரு பிரிவாகவும், தொமுச தலைமையிலான தொழிற்சங்கக் கூட்டமைப்பு தலைமையில் ஒரு பிரிவாகவும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பலகட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  
 
                 இந்நிலையில் தொமுச தலைமையிலான தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெறும் என்று பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகன் அறிவித்திருந்தார். அதன்படி தலைமை அலுவலகம் முன் ஏராளமான ஒப்பந்தத் தொழிலாளர்கள் கூடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் தலைமை அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்திய 914 ஒப்பந்தத் தொழிலாளர்களை கைது செய்தனர்.  
 
                 இதேபோன்று ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் முதல் சுரங்க வாயில் முன் முற்றுகைப் போராட்டம் நடத்திய 1111 ஒப்பந்தத் தொழிலாளர்களை நெய்வேலி தெர்மல் போலீசார் கைது செய்தனர்.  ஒரே நாளில் ஒரே கோரிக்கைகளுக்கு இருவேறு இடங்களில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தின் மூலம் 2025 ஒப்பந்தத் தொழிலாளர்களை நெய்வேலி போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.  இதனிடையே போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் திங்கள்கிழமை சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior