கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கனமழை நீடித்து வருவதால், 24 மணி நேரமும் இயங்கும் வெள்ளக் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.
ஆட்சியர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. வெள்ள நிலைமைகளைக் கண்காணிக்க வட்ட அளவில் துணை ஆட்சியர்கள், கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கடலூர் வட்டத்துக்கு தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) நடராஜன் (செல்ஃபோன் 94434 83094),
குறிஞ்சிப்பாடி வட்டத்துக்கு தனித்துணை ஆட்சியர் (நில எடுப்பு, நெய்வேலி) ராஜேந்திரன் (98423 73444),
பண்ருட்டி வட்டத்துக்கு மாவட்ட ஆதிதிராவிட நலஅலுவலர் திருவேங்கடம் (98948 21351),
சிதம்பரம் வட்டத்துக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் கந்தசாமி (94450 00209),
காட்டுமன்னார்கோவில் வட்டத்துக்கு உதவி ஆணையர் (கலால்) கேசவமூர்த்தி (98424 05631),
விருத்தாசலம் வட்டத்துக்கு சேர்மநல ஆய்வு அலுவலர் பத்மினி (98942 14133),
திட்டக்குடி வட்டத்துக்கு மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் இரா.கணபதி (98427 23080) கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேற்கண்ட அலுவலர்கள் அந்தந்த வட்டத்தில் முகாமிட்டு, வெள்ள நிலைமைகளை கண்காணிக்குமாறு, அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதேபோல் ஒன்றிய அளவில் வட்டார வளர்ச்சி அலுவலர்களும், கிராம அளவில் கிராம நிர்வாக அலுவலர்களும், வருவாய் ஆய்வாளர்களும் கிராமங்களில் முகாமிட்டு வெள்ள நிலைமைகளைக் கண்காணிக்குமாறு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
மேலும் மாவட்ட அளவில் வெள்ள நிலைமைகளைக் கண்காணிக்க, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் வெள்ளம் தொடர்பான தகல்களை சம்மந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்களுக்கோ, மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் உள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு அறைக்கோ தெரிவிக்கலாம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு அறைக்கு, கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04142 220651 என்ற தொலைபேசி எண்ணிலும் தகவல்களைத் தெரிவிக்கலாம் என்றார் ஆட்சியர். கடலூர் மாவட்டத்தில இதுவரை மழைக்கு 12 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் திட்டக்குடி வட்டம் கோனூர் கிராமத்தைச் சேர்ந்த பரிமளா (20) மின்னல் தாக்கி இறந்ததற்காக, அவரது தந்தை குப்புசாமிக்கு ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
மற்றவர்களுக்கு நிவாரணத் தொகை ஏற்கெனவே வழங்கப்பட்டு உள்ளது. மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் முதல்வரால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணை வந்ததும், மேற்கொண்டு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக