சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் ரூ.20 கோடியில் கட்டப்பட்டு வரும் விரிவாக்க கட்டிட பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் கணினிகளுடன் கூடிய நூலகத்தை திறந்து வைத்தார்.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் அல்லாத பரிசோதனை மாணவர்களுக்கான நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியது:-
அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியது:-
கல்லூரிகளில் உடற்கல்வி குறைந்து விட்டது. உடற்கல்வியை மேம்படுத்த வேண்டும். ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி மாணவர்கள் போல் நீங்களும் ஏதாவது கிராமத்தை தத்து எடுத்து மருத்துவ சேவை செய்ய வேண்டும். காலியிடங்கள் இல்லாவிட்டாலும் தி.மு.க. அரசு, டாக்டர்களுக்கு முறையான ஊதிய உயர்வு, பதவி உயர்வுகளை வழங்கி வருகிறது. இதை நீங்கள் மறந்து விடக்கூடாது. தமிழகத்தில் 40 மருத்துவ கல்லூரிகள் தேசிய தரக்கட்டுப்பாடு சான்றிதழ்கள் பெற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக