உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 12, 2010

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இரண்டு நாள் கருத்தரங்கு துவக்கம்

சிதம்பரம் :

                      சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அனைத்திந்திய பல்கலைக் கழகங்கள் பங்கேற்ற தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கு துவங்கியது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கல்வியியல் புலம் சார்பில் எம்.எட்., பயில்பவர்களுக்கு இரண்டு நாள்  தேசிய கருத்தரங்கு துவங்கியது. 

                தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் சார்பில் பி.எட்., பயில்பவர்கள் கல்வி கற்கும் உபகரணங்களை தாங்களாகவே சேகரித்து கொள்வது குறித்து கருத்தரங்கு பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் நடந்தது.  பல்கலை பதிவாளர் ரத்தினசபாபதி தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசினார்.  கல்வியியல் புல முதல்வர் விஸ்வநாதன் வரவேற்றார். புதுடில்லி இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழக கல்வியியல் புல பேராசிரியர் டாக்டர் தாஸ் சிறப்புரையாற்றினார். 

                      தொலைதூர கல்வி இயக்கக இயக்குநர் நாகேஸ்வரராவ், கல்வியியல் இந்திய மொழியியல் புல முதல்வர் முத்து வீரப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  கருத்தரங்கில் நாட்டில் உள்ள பல்வேறு  பல்கலைக்கழகங்களை சர்ந்த கல்வியியல் புல பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாண வர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior