உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 12, 2010

நெய்வேலி அருகே திறக்கப்படாமல் உள்ள நூலகங்கள்

மந்தாரக்குப்பம் குடியிருப்புப் பகுதியில் ஓட்டுக் கொட்டகையில் உள்ள கெங்கைகொண்டான் அரசுக் கிளை நூலகம். (வலது) கம்மாபுரம் ஒன்றியம் வடக்கு வெள்ளூர் கிராமத்தில் உள்ள நூலகம் 
நெய்வேலி:
                   நெய்வேலியை அடுத்த கம்மாபுரம் ஒன்றியத்தில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட நூலகங்கள் திறக்கப்படாமலேயே உள்ளன. ஆனால் பல ஆண்டுகளாக ஆஸ்பெஸ்டாஸ் ஓட்டின்கீழ் செயல்படும் கெங்கைகொண்டான் அரசு கிளை நூலகம் போதிய இடவசதியின்றியும், மழைக் காலங்களில் மழை நீர் நூலகத்தினுள் புகுவதால் புத்தகங்ளை பாதுகாக்க முடியாமலும் அவதிப்படுகின்றனர்.
                    கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பழைய நெய்வேலி, வடக்குவெள்ளூர், சேப்ளாநத்தம், முதனை உள்ளிட்ட கிராமங்களில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் தலா 3 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் நூலகங்கள் கட்டப்பட்டுள்ளன. இக்கட்டடங்கள் கட்டப்பட்டு ஒராண்டுக்கு மேலாகியும் இதுவரை திறக்கப்படவில்லை. மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு கட்டப்பட்ட கட்டடங்கள் அவை எந்த நோக்கத்துக்காக கட்டப்பட்டதோ அது நிறைவேற்றப்படாமல் உள்ளது.
                அதே வேளையில் கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட, மந்தாரக்குப்பத்தில், என்எல்சியின் பழங்கால கட்டடத்தில் கெங்கைகொண்டான் அரசு கிளை நூலகம் செயல்படுகிறது. இந்த நூலகத்தில் சுமார் 10 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த நூலகத்தில் புரவலர்களாகவும், அங்கத்தினர்களாகவும் உள்ளனர். நாள்தோறும் 300-க்கும் மேற்பட்டோர் இந்த நூலகத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால் இந்த நூலகத்தில் புத்தகங்களை அடுக்கிவைக்கக் கூட போதிய இடவசதியில்லை. 
                           மேலும் மழைக் காலங்களில் ஆங்காங்கே ஒழுகுவதால் மழைநீர் உள்ளே புகுந்து, புத்தகங்கள் நனைந்து விடுகின்றன.  இங்குள்ள நூலகரும், புரவலர்களின் உதவியுடன் புத்தகங்களின் ஸ்டாண்டு நனையாதவாறு பாலிதீன் பைகளைக் கொண்டு புத்தகங்களை பாதுகாத்து வருகிறார். பல லட்சம் செலவு செய்து, நூலகத்துக்காக கட்டப்பட்ட புதிய கட்டடங்கள் வெற்றிடமாக தூங்குகின்றன. ஆனால், பல லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் மழையில் நனைந்த வண்ணம் ஓட்டுக் கொட்டகையில் மிதக்கின்றன. அரசும் நூலகத் துறையும் கவனிக்குமா?

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior