கடலூர்:
கடலூரில் இருந்து பெங்களூர், நெல்லை உள்ளிட்ட நகரங்களுக்கு புதிய ரயில்கள் இயக்க வேண்டும் என்று, தெற்கு ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் முனைவர் பி.சிவகுமார் கோரிக்கை விடுத்தார்.
தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அவர் திங்கள்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:
மாவட்டத் தலைநகரமாகவும் புகழ்பெற்ற கோயில்கள் உள்ள நகரமாகவும் அமைந்துள்ள கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, சோழன் எக்பிரஸ் நின்று செல்ல உத்தரவிட்டதற்கு நன்றி. மேலும் நீண்டநாள் கோரிக்கையான, கடலூரில் இருந்து விருத்தாசலம், சேலம் வழியாக பெங்களூருக்கு புதிய ரயில்கள் இயக்க வேண்டும்.
சென்னையில் இருந்து விழுப்புரம், கடலூர் வழியாக நெல்லைக்கு ரயில்கள் இயக்க வேண்டும். கடலூர் துறைமுகம் ரயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலை, திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் வரை நீட்டிக்க வேண்டும். காலை மற்றும் மாலை வேளைகளில், கடலூர், விழுப்புரம் வழியாக சதாப்தி, ஜனசதாப்தி ரயில்களை இயக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக