நடுவீரப்பட்டு :
சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சைக்கிள்கள் நிறுத்த ஷெட் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதுப்பாளையம், சிலம்பிநாதன்பேட்டை, நெல்லித் தோப்பு, இடையர்குப்பம், கொட்டிக்கோணாங்குப்பம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 550 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பெரும்பாலானோர் பள் ளிக்கு சைக்கிளில் வந்து செல்கின்றனர். கடந்த வாரம் பிளஸ் 1 மாணவர்களுக்கு 103 இலவச சைக்கிள்களை எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் வழங்கினார்.
இதனால் பள்ளிக்கு சைக்கிளில் வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. ஆனால் பள்ளியில் சைக்கிள்கள் நிறுத்த "ஷெட்' இல்லாமல் வெயிலிலும், மழையிலும் நிறுத்தப்படுவதால் சைக்கிள்கள் வீணாகி வருகிறது. பள்ளியின் வளர்ச்சிக்கென எஸ்.எஸ்.ஏ., மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் என பல வழியில் நிதி அளித்து வருகிறது. அந்த நிதியில் பள்ளியில் ஒரு "ஷெட்' அமைத்து அதில் சைக்கிள்கள் நிறுத்த கல்வித்துறை, பெற்றோர் ஆசிரியர் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக