உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 11, 2010

மேற்கு வங்கத்தில் அண்ணாமலைப் பல்கலை. தொலைதூர கல்வி மைய படிப்புகள் அறிமுகம்

சிதம்பரம்:

                     அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் வாயிலாக மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் புதிய படிப்புகளான பி.பி.ஒ. மேனேஜ்மெண்ட் என்ற மேலாண்மை படிப்பை அம்மாநில சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நல்வாழ்வுத்துறை கல்வி அமைச்சர் டாக்டர் அப்துஸ்சத்தார் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து வைத்தார்.

                    இந்நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலை. துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன், மேற்குவங்க மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை பிராந்திய இயக்குநர் எஸ்.ஜே.அமலன், தொலைதூரக் கல்வி மைய இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், அண்ணாமலைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் கசாலி, ஒரியன் எஜுடெக் நிறுவனத்தைச் சேர்ந்த சஞ்சீவ் கோத்தாரி, மனிஷ்அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சி குறித்து துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தது: 

                       பி.பி.ஒ. மெனேஜ்மெண்ட் துறை இந்தியாவில் பெரும் பங்காற்றி வருகிறது. பொருளாதார வளர்ச்சியுடன் மிகச்சிறந்த வேலைவாப்பையும் உருவாக்கி வருகிறது. பி.பி.ஓ. துறை உலக சந்தையில் இந்தியாவின் பங்கு வர்த்தகம் யு.எஸ். டாலரில் 12.5 பில்லியனாகும். வகுப்பறையில் மாணவர்கள் இத்தகைய படிப்புகளை பயில்வதற்கும், கார்பரேட் நிறுவனங்களில் பணிபுரிவோரின் திறமைகளுக்கும் உள்ள இடைவெளியை போக்க ஆவன செய்ய வேண்டும். 

                    இதனை கருத்தில் கொண்டு கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட ஒரியன் எஜுடெக் நிறுவனத்துடன் அண்ணாமலைப் பல்கலை. கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பி.பி.ஒ. துறையில் சிறந்த நிபுணர்களை ஏற்படுத்த முடியும் என எம்.ராமநாதன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior