உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 11, 2010

கீழணையிலிருந்து வீராணத்துக்கு கூடுதலாக நீர் திறப்பு


 
சிதம்பரம்:
 
                   கீழணையிலிருந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிக்கு புதன்கிழமை வடவாறு மூலமாக 2 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. புதன்கிழமை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 44.5 அடியாக உயர்ந்துள்ளது. 
 
                ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.5 அடியாகும்.ஏரியிலிருந்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசனத்துக்கு 242 கனஅடியும், சென்னை குடிநீருக்கு 74 கனஅடியும் வெளியேற்றப்படுகிறது.ஏரிப்பாசனத்துக்கு நீர் வெளியேற்றுவது புதன்கிழமை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மழைக்காலம் தொடங்கியுள்ளதால் ஏரியில் அதிகளவு நீர் தேக்கினால் வெள்ளச் சேதத்தை சந்திக்க நேரிடும்.
 
                       எனவே ஏரியில் 44 அடிக்கு மேல் நீர் தேக்கி வைக்கக் கூடாது என சமீபத்தில் நடைபெற்ற பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஏரிக்கு கீழணையிலிருந்து கூடுதலாக நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் புதன்கிழமை ஏரியின் நீர்மட்டம் 44.5 அடியாக உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை ஏரியின் நீர்மட்டம் 45 அடியாக உயரும் என எதிர்பாக்கப்படுகிறது. ஏரியில் அதிகளவு நீர் தேக்கி வைக்கப்படும் முயற்சியால் விவசாயிகள் கவலையுற்றுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior