உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 16, 2010

சேத்தியாத்தோப்பில் மகா ருத்ரயாகம் : ஜப்பான் நாட்டினர் 100 பேர் பங்கேற்பு


சேத்தியாத்தோப்பு  :  

                  உலக நன்மை வேண்டி, சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரகுடியில்  நடந்த மகா ருத்ரயாகம் மற்றும் மகா சண்டி ஹோமத்தில், ஜப்பான் நாட்டினர் பங்கேற்றனர்.

              கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரகுடியில் தாம்பரம் ஸ்ரீஅகத்திய நாடி ஜோதிட நிலையம் மற்றும் ஜப்பான் நாட்டின் அபி இண்டர்நேஷனல் இன் கார்ப் நிறுவனம் இணைந்து உலக நன்மை வேண்டி ஸ்ரீ ஏகாதச மகா ருத்ரயாகம், ஸ்ரீமகா சண்டி ஹோமம், ஸ்ரீமகா சத்ரு சம்ஹார ஹோமம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
 
              குமாரகுடி ஏ.பி.துரைசாமி அரங்கத்தில் நேற்று முன்தினம் இரவு 6 மணிக்கு கணபதி பூஜையுடன் யாக பூஜை துவங்கியது. தொடர்ந்து திருக்கூடலயாத்தூர் கலியமூர்த்தி ஓதுவாரின் தேவாரம் மற்றும் திருவாசக திருமுறை பாடல்கள் ஓதப்பட்டது. நேற்று காலை 10 மணிக்கு துரை சுப்புரத்தினம், குறிஞ்சி செல்வன் முன்னிலையில் ஸ்ரீ ஏகாதச மகா ருத்ரயாகம் துவங்கியது.

                 தெய்வ விக்ரகங்களுக்கு அபிஷேகம் நடந்தது. 50க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் 150க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள், ஆச்சார்யார்கள், தீட்சிதர்கள் ஸ்ரீமகா சண்டி ஹோமத்தையும்,  ஸ்ரீமகா சத்ரு சம்ஹார ஹோமத்தையும் நடத்தினர். உலக நன்மை வேண்டி நடந்த ஹோமத்தில் ஜப்பான் நாட்டு பாரம்பரிய முறையிலான சிறப்பு பூஜையை ஜப்பானிய மதகுரு நடத்தினார்.பின், பூர்ணாஹூதி, விசேஷ தீபாராதனை நடந்தது. இதனையடுத்து, யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அபிஷேகம் நடந்தது. ஹோமத்தில் ஜப்பான் நாட்டை சேர்ந்த 100 பேர் சிறப்பு அழைப்பாளர்களாகவும் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior