உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 16, 2010

அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் ரூ.3 ஆயிரம் மழை நிவாரணம்; பிற்படுத்தப்பட்டோர் பேரவை கோரிக்கை

நெய்வேலி:
  
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் பொது செயலாளர் வீர.வன்னியராஜா முதல்- அமைச்சருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

                அண்மையில் பெய்த கனமழையால் தமிழகம் முழவதும் பெரும்பாலான இடங்களில் மழை வெள்ளத்தால் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன. வீடுகள், விவசாய பயிர்கள் சேதம், சாலை போக்குவரத்து மற்றும் கால்நடைகள் பாதிப்பு அடைந்துள்ளன. அரசு,மழையால் பாதிக்கப்பட்ட சேதங்களை கண்டு அறிந்து உடனடியாக போர்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும்.  

                 தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பல கிராமங்களில் மின்சாரம் இல்லாமல் இருள் சூழ்ந்த நிலையில் உள்ளது. மேலும் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய மின்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, பொதுப் பணித்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளோடு மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைத்து அந்தந்த மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

                  அத்துடன் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப ரேசன் கார்டுகளுக்கும் தலா ரு.3000 மழை நிவாரண தொகை வழங்க வேண்டும். விவசாயத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15000 நிவாரண தொகையாக அரசு வழங்க வேண்டும். மழையால் பலியான குடும்பங்களுக்கு அரசு வழங்கி உள்ள ரூ.2 லட்சத்தை உயர்த்தி ரூ.5 லட்சமாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior