கடலூர்:
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க கோரி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்த தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஊர்வலமாக சென்றனர்.
கடலூர்-புதுவை சாலையை அடைந்த போது ஊர்வலத்தில் வந்த ஆசிரியர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் முருகேசன், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் அப்துல்மஜித் உள்பட சுமார் 400 பேரை கைது செய்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக