நெல்லிக்குப்பம்:
வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெரும் வெள்ளச்சேதம் ஏற்பட்டது. மழை வெள்ளத்தால் பாதித்த நெல்லிக்குப்பம் 6-வது வார்டு பகுதி பொதுமக்கள் வெள்ள நிவாரணம் கோரி நேற்று காலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெல்லிக்குப்பம் பஸ் நிலையம் அருகே நடந்த இந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்தவுடன் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார், நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் போலீசாருடன் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். வெள்ள நிவாரண கோரிக்கை குறித்து அரசு அதிகாரிகளின் கவனத்துக:கு கொண்டு செல்லப்படும் என போலீசார் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக