கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6 லட்சத்து 38 ஆயிரத்து 298 குடும்பங்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தமிழக அரசு இலவச வேட்டி, சேலைகள் வழங்கி வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 38 ஆயிரத்து 39 பெண்களுக்கும், 6 லட்சத்து 38 ஆயிரத்து 298 ஆண்களுக்கும் இலவச வேட்டி சேலை வழங்கப்பட உள்ளது.
கடலூர் தாலுகாக்களில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 37 பெண்களுக்கும்,
குறிஞ்சிப்பாடி தாலுகாவில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 296 ஆண்களுக்கும்,
பண்ருட்டி தாலுகாவில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 49 நபர்களுக்கும்,
சிதம்பரம் தாலுகாவில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 435 நபர்களுக்கும்,
காட்டுமன்னார்கோவிலில் 72 ஆயிரத்து 377 நபர்களுக்கும்,
விருத்தாசலத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 240 நபர்களுக்கும்,
திட்டக்குடி தாலுகாவில் 72 ஆயிரத்து 951 நபர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட உள்ளது.
இதற்கான வேட்டி, சேலைகள் கடலூர் கோ-ஆப்டெக்ஸ் மண்டல குடோனில் இருந்து அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது தாலுகா அலு வலகங்களில் இருந்து கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக