சிதம்பரம் :
அண்ணாமலை நகர் பகுதியில் பிற்பட்ட மானிய நிதி திட்டத்தின் கீழ் 8.5 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது.
அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது. தலைவர் கீதா கலியமூர்த்தி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் குப்புசாமி முன்னிலை வகித்தார். துணை தலைவர் பாண்டியன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் அண்ணாமலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிற்படுத்தப்பட்ட மானிய நிதி திட்டத்தில் 9 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பணி ஆணை வழங்கப்பட்டது.
பொது நிதி திட்டத்தின் கீழ் 6 லட்சம் பதிப்பில் பணிகள், அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆளவை மன்ற குழுவிற்கு செனட்சபைக்கு உறுப்பினராக பேரூராட்சி தலைவரை நியமனம் செய்ய ஆளுனரை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக