உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
வியாழன், ஜனவரி 06, 2011

கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்கள் ஹெல்மெட் ஊர்வலம்

கடலூர் : 

              சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி கடலூரில் போக்குவரத்து போலீசார் மற்றும் செயின்ட் ஜோசப் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. செயின்ட் ஜோசப் கல்லூரியில் துவங்கிய ஊர்வலத்தை டி.எஸ்.பி., பாண்டியன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன், நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர் சந்தானராஜ், பேராசிரியர் கிறிஸ்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
                      போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த ஊர்வலத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், பிரகாஷ் மற்றும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து சென்றனர். பொதுமக்களுக்கு சாலை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior