உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

சனி, பிப்ரவரி 19, 2011

வாக்காளர் அடையாள அட்டை நகல் பெற ரூ.15 கட்டணம்: இன்றும், நாளையும் (19 மற்றும் 20ம் தேதி) சிறப்பு முகாம்கள்

          வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை தொலைத்தவர்கள், அதன் நகலை பெற 15 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

             பல்வேறு காரணங்களால், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை தொலைத்தவர்கள், அந்த அட்டையின் நகலை பெற இன்றும், நாளையும் (19 மற்றும் 20ம் தேதி) சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அனைத்து பிர்கா தலைமையிடங்கள், நகர் பகுதிகளில் மண்டல அலுவலகங்களில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.

             இதற்காக வருவோர், படிவம் 001சி மற்றும் நகல் அட்டைக்காக 15 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், இவ்வாறு அட்டை கோருபவர்கள், சரியான நபர்களா என்பதை உறுதிப்படுத்த ஏதுவாக, அடையாளத்துக்கான சான்று, முகவரி சான்றுடன் வர வேண்டும். இதற்கென நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கட்டணத்துக்காக ரசீது வழங்குவர். 

                எனவே, கட்டணத்தை வங்கி பே ஆர்டர் அல்லது கருவூலத்தின் மூலம் செலுத்தத் தேவையில்லை.வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களும் 6ம் படிவத்திலும், பெயரில் மாற்றம் கோருவோர் 8ம் படிவத்திலும், அதே தொகுதிக்குள் முகவரி மாற்றம் கோருவோர் 8-ஏ படிவத்திலும், இந்த முகாம்களில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior