உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 22, 2011

வரும் ஆண்டு முதல் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு போலி மதிப்பெண் பட்டியலை தவிர்க்க புதிய நடைமுறை அமல்

          போலி மதிப்பெண் பட்டியலை தடுக்க, வரும் ஆண்டு முதல் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.

                பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 2ல் துவங்க உள்ளது. அத்தேர்வு முடியும் போது மெட்ரிக், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் நடக்க உள்ளன. இத்தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பிளஸ் 2 பிராக்டிக்கல் தேர்வு பிப்., 18ல் முடிவடைந்துவிட்டது. தற்போது, இந்த மாணவர்களுக்கான வினாத்தாள் கட்டுகள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தேர்வு நேரத்தில் வினாத்தாள் கட்டுக்களை வைக்க வேண்டிய "கஸ்டோடியன் பாயின்ட்' களை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு மாவட்டங்களுக்கு ஒரு இணை இயக்குனர் தேர்வுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

                 விரைவில் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களின் மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. தேர்வு முடிந்த பின், விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மே இறுதியில் முடிவு வெளியிடப்படும். தேர்வு முடிவு வெளியான ஒரு வாரத்தில் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். கடந்த ஆண்டுகளில் போலி மதிப்பெண் பட்டியல் வெளியாகி, தமிழகத்தையே தலைகுனிய வைத்துவிட்டன. இதை தவிர்க்க, இந்த ஆண்டு மதிப்பெண் பட்டியலில் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலில் இணை இயக்குனர் (மேல்நிலை), பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் இணை இயக்குனர் (எஸ்.எஸ்.எல்.சி.,) யின் கையெழுத்துகள் இடப்பட்டிருக்கும். 

              அந்தக் கையெழுத்துகள் இணை இயக்குனரின் "பேசிமிலி'யால் (கையெழுத்தைப் போன்றே ரப்பர் ஸ்டாம்பால்) இடப்படுவது வழக்கம். இனி வரும் ஆண்டு முதல் கம்ப்யூட்டர் பிரின்டாகவே கையெழுத்து இடப்பட்டு இருக்கும். இதனால் போலியாக "பேசிமிலி' தயாரித்து வினியோகிப்பதை தவிர்க்க முடியும். மேலும், இதுவரை மதிப்பெண் பட்டியலில் "மீடியம்' குறிப்பிடப்பட்டு இருக்காது. இனி தமிழ், ஆங்கிலம் மீடியம்களுக்கு தனித்தனி மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளது. இது குறித்து கடந்த வாரம் நடந்த தேர்வுத்துறை உயரதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior