உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
செவ்வாய், பிப்ரவரி 22, 2011

பரங்கிப்பேட்டையில் பெண்களுக்கு மீன் உணவு தயாரித்தல் பயிற்சி

பரங்கிப்பேட்டை : 

          பரங்கிப்பேட்டையில் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேசிய மீன் வள மேம்பாட்டு வாரியம் சார்பில் மீனவ பெண்களுக்கு மதிப்புக்கூட்டிய மீன் உணவு பொருட்கள் தயாரித்தல் பயிற்சி முகாம் நடந்தது. 

           திட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்விழி தலைமை தாங்கினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய புல முதல்வர் பாலசுப்ரமணியன் துவக்கி வைத்தார். திட்ட அலுவலர் இளங்கோவன், கிராம அறிவு மையத்தின் செயல்பாடுகள் மற்றும் மதிப்புக்கூட்டிய மீன் உணவு பொருட்கள் தயாரித்தல் பயிற்சி முக்கியத்துவம் பற்றி விளக்கினார்.கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய பேராசிரியர்கள் கோபாலகிருஷ்ணன், சரவணக்குமார் பங்கேற்றனர். வீரராஜ் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior