உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
செவ்வாய், பிப்ரவரி 22, 2011

பண்ருட்டி அண்ணா அரசு பொறியியல் கல்லூரியில் தகவல் முனையம் துவக்கம்

பண்ருட்டி : 

         பண்ருட்டி அண்ணா பொறியியல் கல்லூரியில் தகவல் முனையம் துவங்கப்பட்டது. பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பத்தில் உள்ள அரசு அண்ணா பொறியியல் கல்லூரியில் தகவல் முனையம், சமுதாயக் கல்லூரி துவக்கம், என் பெயர் மரம், விருப்ப மன்றம், விளையாட்டு விழா ஆகிய ஐம்பெரும் விழா நடந்தது.
 
            திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அலுவலர் மதன்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி புலமுதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். தனி அலுவலர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். 

அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக பதிவாளர் ராஜா தகவல் முனையத்தை துவக்கி வைத்து பேசுகையில், 

              "இணைய தள வசதிகளுடன் தகவல் முனையம் பொதுமக்கள் தேவைக்காக பல்கலைகழகம் துவக்கியுள்ளது. விண்ணப்பங்கள் பெறவும், பூர்த்தி செய்வது உள்ளிட்டவைகள் தகவல்கள் பெற்றுக்கொள்ளலாம்' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior