உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 08, 2011

கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ஒரே நாளில் 300 ஜோடிகளுக்கு திருமணம்

 கடலூர் :

          கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நேற்று நடந்த 300க்கும் மேற்பட்ட திருமணங்களால், ஐந்து கி.மீ., தொலைவிற்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. பொதுமக்களும், பக்தர்களும் பெரும் சிரமத்திற்குள்ளாயினர். தை மாதத்தில் மிகச் சிறந்த சுப மூகூர்த்த நாளான நேற்று கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

             50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் மாலை முதல் குவிந்ததால் திருவந்திபுரத்தில் எந்தப் பக்கம் திரும்பினாலும், மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. காலை 7.30 மணி வரை 225 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலம் என்பதால், அதன் பிறகு 75க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. ஒரே நேரத்தில் 300 ஜோடிகளுக்கு திருமணம் நடந்ததால், வெளியூர்களில் இருந்து வந்தவர்கள், எந்த இடத்தில் தங்கள் உறவினரின் திருமணம் நடக்கிறது எனத் தெரியாமல் அல்லாடினர். கோவிலில் திருமண கோஷ்டியினர் திரண்டதால், சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளா கினர்.

                 திருமண கோஷ்டியினர் வந்த பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களும், திருமணத்திற்கு வந்தவர்களின் இருசக்கர வாகனங்களும், கடலூர் - பாலூர் நெடுஞ்சாலை ஓரங்களில் 5 கி.மீ., தூரத்திற்கு நிறுத்தப்பட்டன.
இதனால் கடலூர் - பாலூர் - பண்ருட்டி நெடுஞ்சாலையில், சுந்தரவாண்டி முதல் கூத்தப்பாக்கம் வரை, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளி, கல்லூரி சென்ற மாணவ, மாணவியரும், அலுவலகம் சென்றவர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior