உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
செவ்வாய், பிப்ரவரி 08, 2011

விருத்தாசலம் வாணிபக் கழக கிடங்கில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் விருத்தாசலத்தில் சரிபார்க்கும் பணி

விருத்தாசலம் :

             மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை முழுமையாக சரி பார்த்தல் பணி நடந்தது. வரும் தேர்தலுக்கு பயன்படுத்த உள்ள மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு விருத்தாசலம் வாணிபக் கழக கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 

              இந்த மின்னணு இயந்திரங்களை முழுமையாக சரிபார்க்கும் பணி நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., முருகேசன், நில எடுப்பு டி.ஆர்.ஓ., மாலினி, தாசில்தார் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் பெட்டிகள் திறக்கப்பட்டது. பின்னர் பல்வேறு அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் இயந்திரங்கள் சரியாக இயங்குகிறதா, முன்னரே ஓட்டுகள் பதியப்பட்டுள்ளதா என சரிபார்க்கப்பட்டது. பின்னர் மாதிரி ஓட்டுப் பதிவு நடத்தப்பட்டு ஓட்டு எண்ணிக்கை மற்றும் முடிவு சரியாக உள்ளதா என சரிபார்க்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior