பண்ருட்டி :
பண்ருட்டி அடுத்த மருங்கூரில் அனல் மின் நிலையம் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. டேனக்ஸ் கம்பெனி இயக்குனர் கிறிஸ்டியர்ன்லீஸ் தலைமை தாங்கினார். இயக்குனர்கள் விஸ்வநாதன், ஆண்ட்ரோ முன்னிலை வகித்தார். தொழில்நுட்ப இயக்குனர்கள் சிவக்குமார், ராமச்சந்திரன், டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன், நகர தி.மு.க., மாணவரணி குணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து தொழில் நுட்ப இயக்குனர் ராமச்சந்திரன் கூறியது:
டேனக்ஸ் அனல் மின்நிலைய நிறுவனம் 100 ஏக்கர் பரப்பளவில் 600 கோடி முதலீட்டில் 110 மெகாவட் உற்பத்தி திறனுக்காக இந்தோஷினியாவில் இருந்து இறக்குமதி செய்யும் நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்வதற்கான திட்டப் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. மிககுறைந்த அளவில் தன்னிறைவு பெறுவதற்கான (காற்று உபயோகத்துடன் குளிரூட்டும்) தொழில்நுட்பத்துடன் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் உபயோகப்படுத்தப்பட உள்ளது. 24 மாதத்திற்குள் உற்பத்தியை துவங்கும். நேரடியாக 200 பேருக்கும், மறைமுகமாக 150 பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு தொழில்நுட்ப இயக்குனர் ராமச்சந்திரன் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக