உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

புதன், பிப்ரவரி 23, 2011

கடலூரில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிக்கு முன் வைப்புத் தொகை செலுத்த கோரிக்கை

கடலூர் : 

              கடலூரில் பாதாள சாக்கடை பணி முடிவு பெற இருப்பதால் பொதுமக்கள் இணைப்புகள் பெற முன் வைப்புத் தொகையை நகராட்சியில் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கடலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட தெருக்களில் பாதாள சாக்கடை திட்டப்பணி முடியும் தருவாயில் உள்ளது. 

                 இத்திட்டப் பணியை நிறைவேற்ற அரசு மானியமாக 45 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. அரசு கடனாக 8.5 கோடி ரூபாயும், பொது மக்கள் பங்களிப்பாக 11 கோடியும் செலுத்தப்பட வேண்டும். கடலூர் நகராட்சிப்பகுதியில் 16 ஆயிரம் வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிற்கும் 5000 ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும். ஆனால் இதுவரை வெறும் 800 வீடுகள் மட்டுமே பாதாள சாக்கடை திட்டத்திற்காக பணம் செலுத்தியுள்ளனர். இதனால் பொது மக்கள் பங்களிப்புத்தொகை வழங்காததால் திட்டப்பணிகள் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கடலூர் நகராட்சி கமிஷனர் இளங்கோவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                 கடலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட தெருக்களில் பாதாள சாக்கடைத்திட்டப்பணி தற்போது முடியும் தருவாயில் உள்ளது. மேற்படி திட்டப்பணி முடிக்கப்பட்ட தெருக்களில் வீட்டு இணைப்புகள் கொடுக்கப்பட்டால் தான் முழுமையாக பாதாள சாக்கடைத் திட்டத்தினை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இயலும். 

              எனவே பாதாள சாக்கடைப்பணி முடிக்கப்பட்ட தெருக்களில் உள்ள பொது மக்கள் உடனடியாக மேற்படி திட்டப் பணிக்கு இணைப்புகள் பெற அதற்கென உரிய முன்வைப்புத்தொகையை நகராட்சியில் செலுத்தி பாதாள சாக்கடை திட்டம் விரைவில் செயல்பட நகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கமிஷனர் இளங்கோவன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior