நெய்வேலி:
நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப்புற காவல் நிலையங்களில் உள்ள காவலர்கள் தற்போது தூய தமிழில் பேசத் தொடங்கி இருப்பதால், அவை நகைச்சுவையாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.விழுப்புரம் சரக டிஐஜியாக பொன்.மாணிக்கவேல் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அவர் அனைத்து காவலர்களும், காவல் அதிகாரிகளும் எவ்வாறு பொதுமக்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஒலிபெருக்கி வாயிலாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.
மேலும் காவல் அதிகாரிகளை ஒலிபெருக்கி மூலம் பேசச் சொல்லி, ஒவ்வொரு குற்றத்துக்கு என்னென்ன பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக் கேட்டு, முறையாக சொல்லாத அதிகாரிகளை கடிந்து கொண்டார்.இதையடுத்து, அனைத்து காவலர்களும் தூய தமிழில் தான் பேச வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்ததையடுத்து, காவலர்கள் தூய தமிழில் பேசுவதற்கே கூச்சப்படுகின்றனர்.
ஒலிபெருக்கியில் அமர்ந்திருக்கும் காவலர்கள், தூய தமிழில் பேசுவதற்கு தடுமாறுவதைக் கண்டு, சக போலீஸôர் அவர்களை நகைச்சுவையுடன் பார்க்கின்றனர். காவலர்கள் அனைவரும் தூய தமிழைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதால், காவல் நிலையம் செல்வோர், போலீஸôரின் பேச்சைக் கேட்டு கலக்கத்துடனே காவல் நிலையத்துக்கு செல்கின்றனர். போலீஸôர் தங்களை கிண்டல் செய்கிறார்களோ என்ற அச்சத்துடன் போலீஸôரை அணுகுகின்றனர்.
கம்பீரமான தமிழ் ஆர்வலர் ஒருவர் காவல் துறையில் தமிழை மணம் பரப்ப ஆசைப்படுகிறார். அவரது முயற்சியை நாம் பாராட்டுகிறோமோ இல்லையோ, அவரது முயற்சிக்கு முடிந்தவரையில் சக காவலர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் விருப்பம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக