உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 07, 2011

குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதியில் 136 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவை

குறிஞ்சிப்பாடி : 

            குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதியில் 136 ஓட்டுச் சாவடி பதட்டமான வாக்குசாவடி என கண்டறியப்பட்டுள்ளது. 

குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன்  கூறியதது: 

              குறிஞ்சிப்பாடி தொகுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடைமுறை விதிகள் பின்பற்றப்பட்டு வருகிறது. குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனுவை குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்திலும், கடலூரில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜனிடமும் அளிக்கலாம். அனைத்து மனுக்களும் கடலூர் தேர்தல் நடத்தும் அலுவலரால் பரிசீலனை செய்யப்படும். தேர்தல் தொடர்பாக வரும் புகார்களை விசாரிக்க தனி வட்டாட்சியர், பி.டி.ஓ., சப் இன்ஸ்பெக்டர் கொண்ட குழு விசாரிக்கும்.

               தொகுதியில் ஒரு கம்ப்யூட்டர் அறை துவங்கப்பட்டு உடனுக்குடன் தகவல் அளிக்கப்படும். குறிஞ்சிப்பாடியில் 215 ஓட்டுச் சாவடியில் 136 ஓட்டுச் சாவடிகள் பதட்டமான ஓட்டுச் சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது. தொகுதியை 21 மண்டலமாக பிரித்து மண்டல அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நகர பகுதியில் 1,400 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால் அந்த ஓட்டுச்சாவடியை இரண்டாக பிரிக்கவும், கிராமப் புறங்களில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால் இரண்டாக பிரிக்க தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான கணக்கு எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு தேர்தல் அலுவலர் நடராஜன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior