உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 07, 2011

கடலூர் மாவட்டத்தில் சுவர் விளம்பரத்தை அழிக்கும் செலவு அரசியல் கட்சியிடம் வசூலிக்கப்படும்: கலெக்டர் சீத்தாராமன் அறிவிப்பு

கடலூர்:
    
              கடலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கான மையத்தினை மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னிஸ் ஆகியோர் கடலூர் பெரியார் கலைக்கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தனர்.  
பின்னர் கலெக்டர் சீத்தாராமன் கூறியது:-

                 கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில், கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, மற்றும் நெய்வேலி ஆகிய 4 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இதற்கான ஆய்வுப் பணிகள் செய்யப்பட்டு வரைபடங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட உள்ளது.

                அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கூட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமை யாக கடைப்பிடித்து தேர்தலை அமைதியாகவும், நேர்மை யாகவும் நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் உள்ள விளம்பர பலகைகள் மற்றும் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

             தற்போது சில அரசியல் கட்சிகள் விளம்பர பேனர்களை அகற்றி வருகின்றனர். மாவட்டத்தில், 13 தேர்தல் நன்னடத்தை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு விளம்பர பேனர்களை அகற்றுவதுடன், சுவர் விளம்பரங்களை அழித்து வருகின்றனர். இதற்கு ஏற்படும் செலவினத்தை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளிடம் வசூல் செய்யப்படும்.  
              மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், கடலூர் மாவட்டத்தில் உரிமம் பெற்றுள்ள 354 நபர்கள் தங்களது துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் 6-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது கடலூர் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா, பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் மனோகரன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாண்டியன் மற்றும் அலுவலர்கள் உடன் வந்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior