உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 07, 2011

கடலூர் மாவட்டத்தில் மூன்று முறை பெயர் மாறிய திட்டக்குடி (தனி) தொகுதி

கடலூர் : 

               தொகுதி மறுசீரமைப்பில் மூன்றாம் முறையாக பெயர் மாற்றப்பட்டுள்ள திட்டக்குடி (தனி) தொகுதியை தி.மு.க., நான்கு முறை கைப்பற்றியுள்ளது. கடலூர் மாவட்டத்தில், 1951ம் ஆண்டு நடந்த முதல் பொதுத் தேர்தலில் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், புவனகிரி, சிதம்பரம் ஆகிய ஐந்து தொகுதிகள் மட்டுமே இருந்தன. 

                அடுத்து 1957ம் ஆண்டு நடந்த இரண்டாம் பொதுத் தேர்தலுக்கு முன் நடந்த தொகுதி மறுசீரமைப்பில் ஆறாவது தொகுதியாக நல்லூர் உருவானது. 1957 மற்றும் 1962ம் ஆண்டு தேர்தலை மட்டுமே சந்தித்து நல்லூர் தொகுதி பின்னர் நடந்த மறுசீரமைப்பில் மங்களூர் (தனி) தொகுதியாக மாற்றப்பட்டது. அதன்பின் கடந்த 2006ம் ஆண்டு வரை நடந்த 10 பொதுத் தேர்தலை சந்தித்த இத்தொகுதி கடந்த 2008ம் ஆண்டு நடந்த மறுசீரமைப்பில் சிறு மாற்றத்துடன் திட்டக்குடி (தனி) தொகுதியாக அவதாரம் பெற்றுள்ளது. 

                இதுவரை நடந்த 12 சட்டசபை தேர்தலில் முதல் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட வேதமாணிக்கமும், 62ல் நடந்த தேர்தலில் காங்., கட்சியை சேர்ந்த நாராயணசாமி, 67ல் தி.மு.க., கிருஷ்ணன், 71ல் தி.மு.க., ஜெபமாலை, 77ல் அ.தி.மு.க., பெரியசாமி, 80ல் அ.தி.மு.க., கலியமூர்த்தி, 84ல் அ.தி.மு.க., தங்கராஜூ, 89ல் தி.மு.க., கணேசன், 91ல் காங்., புரட்சி மணி, 96ல் த.மா.கா., புரட்சி மணி, 2001ல் விடுதலை சிறுத்தை திருமாவளவன், 2006ல் விடுதலை சிறுத்தை செல்வப் பெருந்தகை வெற்றி பெற்றுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior