உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மார்ச் 13, 2011

திட்டக்குடி அருகே வாகன சோதனை: ரூ.4 லட்சம் பறிமுதல்

திட்டக்குடி:

                   கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தேர்தல் பணிகள் தீவிர கண்காணிப்பு குழுவைச்சேர்ந்த துணைத்தாசில்தார் அண்ணாத்துரை, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமலிங்கம், முருகேசன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் ஆகியோரை கொண்ட குழுவினர் ராமநத்தம் அருகே உள்ள ஆவட்டி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

                  அப்போது சென்னையில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை அவர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரை சென்னை நந்தம்பாக்கம் மேற்கு மாடவீதியைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் ஓட்டி வந்தார். அவர் வைத்திருந்த பையை அதிகாரிகள் சோதனை செய்ததில் அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.

                இதுகுறித்து அந்த குழுவினர் திட்டக்குடி தேர்தல் நடத்தும் அதிகாரி கணபதிக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தேர்தல் நடத்தும் அதிகாரி கணபதி, திட்டக்குடி தாசில்தார் சையத் ஜாபர், மற்றும் போலீசார் விரைந்து வந்து, கார் டிரைவர் ரங்கநாதனிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் போது, அவர் தான் ரியல் எஸ்டேட் புரோக்கராக இருப்பதாகவும், மதுரை ஒத்தக்கடை பகுதியில் விற்கப்பட்ட வீட்டுமனைகளை பதிவு செய்து கொடுக்க செல்வதாகவும் கூறினார்.அது தொடர்பான ஆவணங்களையும் அதிகாரிகளிடம் அவர் காண்பித்தார்.

                 தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின்படி அந்த காரையும், அவர் வைத்திருந்த ரூ.4லட்சத்து 27 ஆயிரத்து 400 ரொக்கப் பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றி, கடலூர் வருமானவரித்துறையிடம் ஒப்படைத்தனர். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior