தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்ட முதல்வர், அமைச்சர்களின் விவரங்கள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன. படங்கள் மட்டும் இடம்பெற தடை நீடிக்கிறது.
பேரவைத் தேர்தல் காரணமாக மார்ச் 1-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ளன. தலைமைச் செயலகத்தில் உள்ள துறைகளின் அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த முதல்வர், அமைச்சர்களின் படங்கள் எடுக்கப்பட்டன. 32 துறைகளிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழக அரசின் இணையதளத்திலும் www.tn.gov.in நடவடிக்கை எடுக்கப்பட்டது. இணையதளத்தில் முதல்வர், அமைச்சர்கள் ஆகியோரைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கான "லிங்க்' (இணைப்பு) தடை செய்யப்பட்டது. இதனால் அவர்களைப் பற்றி தகவல்களை அறிய முடியாத நிலை இருந்தது.

இப்போது, "லிங்க்' மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் படங்கள் ஏதுமில்லை. முதல்வர் கருணாநிதியின் அரசியல் அனுபவங்கள், தேர்தலில் அவர் போட்டியிட்ட தொகுதிகள் என அனைத்து விவரங்களும் உள்ளன.தேர்தல் ஆணையத்தின் உத்தரவைக் காட்டி முதலில் முடக்கப்பட்டிருந்த முதல்வர், அமைச்சர்கள் குறித்த விவரங்கள் இப்போது திடீரென செயல்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக