உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
திங்கள், மார்ச் 21, 2011

பண்ருட்டியில் பல்லுயிர் பெருக்கம் மூன்று நாள் முகாம்

பண்ருட்டி : 

          பண்ருட்டி அடுத்த திருவதிகையில் பல்லுயிர் பெருக்கம் குறித்த மூன்று நாள் முகாம் நடந்தது. 

                 மத்திய சுற்றுசுழல், வனத்துறை உதவி மற்றும் சென்னை சி.பி.ராமசாமி அய்யர் பவுண்டேஷன் வழிகாட்டுதல்படி நெய்வேலி பயோனியர் தொண்டு நிறுவனம் சார்பில் பல்லுயிர் பெருக்கம் குறித்த 2010 - 11ம் ஆண்டிற்கான சுற்றுச்சுழல் முகாம் பண்ருட்டி திருவதிகை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 3 நாட்கள் நடந்தது. முகாமிற்கு தொண்டு நிறுவன இயக்குனர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். 

               தலைமை ஆசிரியர் இன்பம் முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியை ராஜலட்சுமி வரவேற்றார். புலவர் சஞ்சீவிராயர் காடுகளில் உள்ள அனைத்து இயற்கை உயிரினங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். வளர்க்கப்பட வேண்டும் என்பது (பல்லுயிர் பெருக்கம்) குறித்து சிறப்புரையாற்றினார். மாணவ, மாணவிகளிடையே கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டியில் பங்கேற்றவர்களுக்கு தமிழ்செம்மொழி பேரவை மாநில அமைப்பாளர் கலைமணி பரிசு வழங்கினார். முகாம் ஏற்பாடுகளை ஆசிரியை கனிமொழி, பள்ளி அலுவலர் மரியசுந்தரஜோசப், தொண்டு நிறுவன இளவரசி ஆகியோர் செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior