உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், ஏப்ரல் 12, 2011

வரும் கல்வி ஆண்டு 1வது முதல் 10வது வகுப்பு வரை அனைவருக்கும் சமச்சீர்கல்வி

       மெட்ரிகுலேசன், மாநில கல்வி வாரியமுறை, ஓ.எஸ்.எல்.சி., ஆங்கிலோ இந்தியன் ஆகிய 4 முறையான கல்வி முறை ஒழிக்கப்பட்டு அனைவருக்கும் ஒரே கல்வி முறையாக சமச்சீர் கல்வி முறை வருகிற கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது.

            தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி திட்டம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு அமல் படுத்தியது. அதாவது 1வது வகுப்பு மற்றும் 6வது வகுப்பு ஆகியவற்றுக்கு மட்டும் இந்த சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. வருகிற கல்வி (2011 2012) ஆண்டு முதல் 1வது முதல் 10வது வகுப்பு வரை அனைவருக்கும் சமச்சீர்கல்வி முறை கொண்டுவரப்படுகிறது. அதாவது ஏற்கனவே நடைமுறையில் உள்ள மெட்ரிகுலேசன் முறை, மாநில கல்வி முறை, ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் முறை (ஓ.எஸ்.எல்.சி.) ஆகிய 4 முறையான கல்வி முறை இருந்தது.            இதில் ஓரியண்டல் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் மிக மிக குறைவானவை. ஆனால் மெட்ரிகுலேசன் பள்ளிகள் அதிகம். மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பல பள்ளிகள் சி.பி.எஸ்.சி. என்ற மத்திய அரசின் கல்விமுறைக்கு மாறி வருகின்றன. காரணம் சமச்சீர் கல்வி கொண்டுவரப்படுவதால் நடுத்தர மக்கள் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

             திங்கட்கிழமை  எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மெட்ரிகுலேசன் தேர்வுகள் முடிவடைந்தன. இந்த வருடம் தான் எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் முறை ஆகியவற்றிற்கு கடைசி தேர்வாகும். இனிமேல் தமிழ்நாட்டில் ஒரே தேர்வு முறைதான்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior