உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், ஏப்ரல் 12, 2011

இணையதளம் மூலம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு நன்கொடை


           இணையதளம் மூலம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு நன்கொடை அளிக்கும் புதிய வசதியை எச்.டி.எஃப்.சி. வங்கி திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. 

              இதன்படி, கோயிலுக்கு நேரில் சென்று நன்கொடை அளிக்க முடியாத பக்தர்களின் வசதிக்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 
 இது குறித்து வங்கியின் வங்கித் தொழில் செயல்பாடுகளுக்கான தேசியத் தலைவர் ஏ.ராஜன் கூறியது:  
 
           வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் முறை ஏற்கெனவே இருந்து வருகிறது. இந்த புதிய திட்டத்தில் பக்தர்கள் "நெட் பேங்கிங்' மூலம் நன்கொடையை செலுத்தலாம்.  எந்த தேவைக்காக நன்கொடை அளிக்கின்றனர் என்ற தகவலை இணையதளத்தில் பதிவு செய்து, நன்கொடையை செலுத்த வேண்டும் என்றார் அவர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior