உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 20, 2011

2011-12 கல்வியாண்டில் பொறியியல் படிப்பு: அரசு ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை 2.1 லட்சம் இடங்கள்


   
               பொறியியல் படிப்புகளில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் அரசு ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 2.1 லட்சமாக உயர வாய்ப்பு உள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறினார்.
 
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
 
              டந்த 2010-11 கல்வியாண்டில் 1.9 லட்சம் அரசு ஒதுக்கீட்டின் கீழான பி.இ. இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன.ஆனால், இப்போது புதுக் கல்லூரி தொடங்குவதற்காக மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி ஏ.ஐ.சி.டி.இ.-க்கு தமிழகத்திலிருந்து 83 விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. இதில் 40 பேர் பொறியியல் கல்லூரிகள் தொடங்க விண்ணப்பித்துள்ளனர்.மேலும், தமிழகத்தில் உள்ள 486 பொறியியல் கல்லூரிகளில் பெரும்பாலான கல்லூரிகள், பி.இ. படிப்புகளில் மாணவரின் எண்ணிக்கையை உயர்த்த கோரி விண்ணப்பித்துள்ளன. 
 
           எனவே, வரும் 2011-12 கல்வியாண்டில் பி.இ. இடங்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டுவதற்கு வாய்ப்புள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பி.இ. இடங்கள் 30 ஆயிரமாக உயர்ந்து வருகிறது. எனவே, வரும் கல்வியாண்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும் பி.இ. இடங்களின் எண்ணிக்கை 2.1 லட்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் மன்னர் ஜவஹர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior