இயற்கை வளங்களை கண்டறிய உறுதுணைபுரியும் ரிசோர்ஸ்சாட்-2 உள்ளிட்ட மூன்று செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி16 ராக்கெட் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது.
சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவு தளத்தில் இந்த ராக்கெட் லை 10 மணி 12 நிமிடங்களுக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதையடுத்து, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இஸ்ரோ'வின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் குழுவினர் கைதட்டி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வை நேரில் பார்ப்பதற்காக குவிந்திருந்த ஆர்வலர்களும், மாணவர்களும் ஆரவாரம் செய்தனர். இந்த பி.எஸ்.எல்.வி-சி16 ராக்கெட், இந்தியாவிலேயே, 'இஸ்ரோ' விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட 1206 கிலோ எடையுள்ள 'ரிசோர்ஸ் சாட்-2', இந்தியா-ரஷியா கூட்டு தயாரிப்பில் உருவான 92 கிலோ எடையுள்ள 'யூத்சாட்,' சிங்கப்பூர் பல்கலைக்கழக மாணவர்களால் தயாரிக்கப்பட 106 கிலோ எடையுள்ள 'எக்ஸ்சாட்' ஆகிய 3 செயற்கை கோள்களை ஏந்திச் சென்றது. இஸ்ரோ மூலம் சிங்கப்பூர் செயற்கை கோள் அனுப்புவது இதுவே முதல் முறை.
இந்தியா ஏற்கெனவே ரிசோர்ஸ்சாட்-1 என்ற செயற்கை கோளை கடந்த 2003-ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. அதன் ஆயுள் காலம் முடிவடைவதால், ரிசோர்ஸ்சாட்-2 என்ற அதிநவீன 2-வது செயற்கை கோள் இப்போது அனுப்பப்பட்டுள்ளது. இது, இயற்கை வளங்களை கண்டறியவும், அவற்றின் மேலாண்மை பற்றி ஆராயவும் பயன்படுத்தப்படும். ரிசோர்ஸ்சாட்-2 செயற்கைக்கோளின் ஆயுள் காலம் 5 ஆண்டுகள். இதில் 3 அதிநவீன கேமராவும், கனடா நாட்டின் 'காம்தேவ்' என்ற அதிநவீன கருவியும் கூடுதலாக அனுப்பப்படுகிறது.
இவை ஒரு நாளைக்கு 14 முறை வானவெளியில் சுற்றி வந்து கப்பல்களின் நடமாட்டம் பற்றிய தகவல்களை அனுப்பும்.கடந்த 1994-ம் ஆண்டு முதல் பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை 44 செயற்கை கோள்களுடன் 17 முறை விண்ணில் அனுப்பியது. அவற்றில் 16 முறை வெற்றியடைந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 25-ம் தேதி அனுப்பிய ஜி.எஸ்.எல்.வி ராக்கெட், விண்ணில் பாய்ந்த சில நிமிடங்களிலேயே நடுவானில் வெடித்து சிதறியது. இதன் காரணமாக பி.எஸ்.எல்.வி. ராக்கெட் குழுவினர் மிகவும் கவனமாக செயல்பட்டு பி.எஸ்.எல்.வி-சி16 ராக்கெட்டை உருவாக்கியிருந்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக