உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

புதன், ஏப்ரல் 20, 2011

இயற்கை வளங்களை பாதுகாக்க புதுச்சேரி மாணவர்கள் சைக்கிள் பயணம்

பரங்கிப்பேட்டை : 

           இயற்கை வளங்களை பாதுக்காக்க வலியுறுத்தி புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசார பயணம் மேற்கொண்டனர். 

               புதுச்சேரி அடுத்த பாகூர் பிரபு சர் அனுசாமி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 50 பேர் மற்றும் ஆசிரியர்கள் 10 பேர் இணைந்து இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி நேற்று சைக்கிளில் 4 நாட்கள் விழிப்புணர்வு பிரசார பயணம் மேற்கொண்டனர். பாகூரில் இருந்து கடலூர் வழியாக புதுச்சத்திரம், பு.முட்லூர், பிச்சாவரம், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில், வீராணம் வழியாக கங்கைகொண்ட சோழபுரம் சென்று அங்கிருந்து பாகூருக்கு திரும்பிச் செல்கின்றனர். வழிநெடுகிலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மரம் வளர்ப்பது உள்ளிட்டவைகளை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior